ஈக்வேடார் எரிமலை 2020ஆம் ஆண்டில் வெடித்து சிதறியது. அதிலிருந்து வெளிவந்த கருமையான தீப்பிளம்புகள் 12,000 மீட்டர் உயரத்திற்கு எழும்பிற்று என்று செய்தி ஊடகங்கள் அறிவிக்கிறது. அந்த பிளம்பு நான்கு மாகாணங்களில் (ஏறத்தாழ 198,000 ஏக்கர்) பாய்ந்து சாம்பல் நிறத்தில் காணப்பட்டது. வானம் மங்கலாகவும், இருள் சூழ்ந்தும் காணப்பட்டது. காற்று சற்று தடிமனாய் வீசியதால் சுவாசிக்க கடினமாய் தோன்றியது. பெலிசியானோ இங்கா என்ற விவசாயி, “எல் கமர்சியோ” என்ற பத்திரிக்கையில் அளித்த பேட்டியொன்றில், “இந்த தூசுகளெல்லாம் எங்கிருந்து வந்தன என்று எங்களுக்குத் தெரியாது… ஆனால் வானம் இருட்டுவதை கண்டு நாங்கள் அஞ்சினோம்” என்று கூறியுள்ளார்.
இஸ்ரவேலர்கள், “சேர்ந்துவந்து, (சீனாய்) மலையின் அடிவாரத்தில்” நின்று, “அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும்” சூழ்ந்ததைக் கண்டு அஞ்சினர் (உபாகமம் 4:11). அதிரக்கூடிய தேவனுடைய சத்தத்தைக் கேட்டு மக்கள் அஞ்சினர். அது பயமுறுத்தக்கூடியதாயிருந்தது. ஜீவனுள்ள தேவனை சாட்சியிடும் ஆச்சரியமான ஒரு அனுபவமாய் அது இருந்தது.
பின்பு “கர்த்தர்… பேசினார்,” அவர்கள், “வார்த்தைகளின் சத்தத்தை” கேட்டார்கள், ஆனால் “ஒரு ரூபத்தையும் காணவில்லை” (வச. 12). அவர்களின் எலும்புகளை அதிரப்பண்ணிய வார்த்தை அவர்களுக்கு ஜீவனையும் நம்பிக்கையையும் கொடுத்தது. தேவன் இஸ்ரவேலர்களுக்கு பத்துக் கற்பனைகளைக் கொடுத்து, அவர்களோடு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார். கருமேகத்திலிருந்து ஒலித்த அந்த சத்தம் அவர்களை அதிரப்பண்ணியது. ஆனால் அவர்களை கவர்ந்திழுத்து நேசித்தது (யாத்திரரகமம் 34:6-7). தேவன் வல்லமையுள்ளவர், உலகத்திற்கு அப்பாற்பட்டவர், அதிரக்கூடியவர். ஆனாலும் அவர் நம்மை அன்போடு நெருங்குகிறார். வல்லமையுள்ள அன்பான தேவனே நம்முடைய அத்தியாவசிய தேவை.
தேவனுடனான உங்களின் எந்த அனுபவம் உங்களை பயமுறுத்தியது? அவர் தம்முடைய அன்பை உங்களுக்கு எப்படி தெரிவித்தார்?
தேவனே, நான் அதிகம் எதிர்பார்த்து, உம்மை சாதாரணமாய் கருதினேன். உம்முடைய பொறுமைக்காக நன்றி. உம்முடைய அன்பிற்காகவும் நன்றி.