வாழ்பவர்களுக்கான இலவச மரண ஊர்வலம். தென்கொரியாவில் இப்படி ஒரு சேவையை ஒரு அமைப்பு செய்துவருகிறது. 2012இல் அந்த அமைப்பு துவங்கியதிலிருந்து 25000க்கும் மேற்பட்ட இளைஞர் முதல் ஓய்வுபெற்றவர் வரையிலும் தங்கள் மரணத்தைப் பொருட்படுத்தினால் நலமாய் வாழமுடியும் என்று முன்வந்து அதில் ஈடுபட்டுள்ளனர். அதின் அலுவலர்கள் இதுபோன்ற உருவகப்படுத்தப்பட்ட மரண ஊர்வலங்கள் மக்களுக்குள் ஜீவியத்தின் மேன்மையையும், நன்றியுணர்ச்சியையும், பிரிந்திருக்கும் குடும்பங்களிடையே மன்னிப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது என்கின்றனர். 

இந்த வார்த்தைகள் பிரசங்கி புத்தகத்தின் ஆசிரியராகிய ஞானியின் வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது. “இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்;உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்” (பிரசங்கி 7:2). மரணம் என்பது வாழ்க்கையில் சொற்ப தன்மையையும் நாம் வாழப்போவது கொஞ்ச காலம் என்பதையும் அதிலே மற்றவர்களை நேசிப்பதின் அவசியத்தையும் நமக்கு வலியுறுத்துகிறது. அது பணம், உறவுகள், மகிழ்ச்சி போன்ற தேவன் கொடுக்கும் ஆசீர்வாதங்களிலிருந்து நம்முடைய பிடியைத் தளர்த்தி, நம்முடைய பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்துவைக்க ஊக்குவிக்கிறது. “அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” (மத்தேயு 6:20). 

மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நம் கதவை தட்டக்கூடும். அது நம் பெற்றோரைச் சந்திக்கும் நம் சந்திப்பை ஒத்திவைப்பதையோ, தேவனுக்கு ஊழியம் செய்யும் நம் திட்டங்களை தள்ளிவைப்பதையோ, அல்லது நம் பிள்ளைகளோடு நேரம் செலவழிக்கத் தவறுவதையோ மதியீனம் என்று வலியுறுத்துகிறது. கர்த்தரின் உதவியோடு நம் வாழ்க்கையை ஞானமாய் வாழப் பழகுவோம்.