ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையில், என் குடும்பத்தினர் பார்க்கும் தேசியச் செய்தியில், ஒரு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பு நிறைவு செய்யப்படுகிறது. “புனித வெள்ளி” அன்று,கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு, முற்றிலும் குணமடைந்த பிறகு, தன்னுடைய பிளாஸ்மாவை தன்னைப்போல இந்த நோய்க் கிருமிக்கு எதிராக போராடுபவர்களுக்கு தானம் கொடுக்க முடிவெடுத்த ஒரு நிருபரை மையமாகக் கொண்டு, நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. ஆனால், எதிர்பொருள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நடுவர் குழு இன்னும் தீர்மானிக்கவில்லை. பலர் உதவியற்றவர்களாக உணர்ந்தபோது, பிளாஸ்மாவை (ஊசி வழியாக) தானம் செய்வதில் இருந்த உபாதைகளை அறிந்தபோதும், அவள் அதை “சாத்தியமான ஊதியத்தை செலுத்த ஒரு சிறிய விலை” என்று உணர்ந்தாள்.
அந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பிற்குப் பிறகு, நானும் என் குடும்பத்தினரும் ஊக்குவிக்கப்பட்டதாக உணர்ந்தோம் – சொல்லப்போனால் நம்பிக்கையினால் நிறைந்திருந்தோம். பிலிப்பியர் 4:8ல் பவுல் குறிப்பிட்டிருக்கிற “எவைகளோ” வின் வல்லமை இது தான். “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ”, (வச. 8). பவுலின் மனதில் பிளாஸ்மா தானத்தைப் பற்றி எண்ணம் இருந்ததா? நிச்சமாக இல்லை. ஆனால் தேவையோடு இருக்கும் ஒருவருக்காக தியாகச் செயல்கள் என்பது அவரது மனதில் இருந்ததா – வேறுவிதமாகக் கூறினால், கிறிஸ்துவைப் போல நடத்தை? சந்தேகமே இல்லை – பதில் ஆம் தான்.
ஆனால் அந்த நம்பிக்கையூட்டும் செய்தி ஒளிபரப்பப்பட்டிருக்காவிட்டால் அது முழு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. நம்மைச் சுற்றி நடக்கும் “எவைகளையோ” நாம் பார்ப்பதும், கவனிப்பதும், தேவனுடைய நன்மைகளுக்கு சாட்சிகளாவதும், சுவிசேஷத்தை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதும் நமக்கு சிறப்புரிமையாகும்.
சமீபத்தில் உங்களை உற்சாகப்படுத்தின “எவைகளையோ”வின் கதை எது? உங்கள் கதையை யார் விரும்பிக் கேட்பார்கள்?
பிதாவே, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, இவைகளுக்குப் பின்னால் நீர் இருக்கிறீர் என்பதை அறிவேன். நான் உம்மை நேசிக்கிறேன்.