மூன்றாம் தலைமுறை விவசாயியான பாலா, “என் நாமத்துக்கு பயந்திருக்கும்… நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய் கொழுத்த கன்றுகளைப் போல் வளருவீர்கள்” (மல்கியா 4:2), என்பதை வாசிக்கும்போது மிகவும் உற்சாகமடைந்து, தேவன் அளிக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஜெபித்தார். தொழுவத்திலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட கன்றுகள் துள்ளி குதித்து அதி வேகமாக, உற்சாகத்தோடு வெளியேறுவதை தெளிவாக நினைவுக்கூர்ந்த பாலா தேவன் வாக்குப் பண்ணின உண்மையான சுதந்திரத்தைக் குறித்து புரிந்துகொண்டார்.
தேவனுடைய நமத்துக்குப் பயந்தவர்கள் மற்றும் அவருக்கு உண்மையாயிருக்கிறவர்களுக்கும், தங்களை மட்டுமே நம்பியிருக்கிறவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி தீர்க்கதரிசி, மல்கியா 4ல் கொடுக்கப்பட்டுள்ள கற்பனைகளைப் பற்றி நானும் பாலாவின் மகளும் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும்போது, அவள் இந்தக் கதையைப் பற்றி என்னிடம் கூறினாள் (4:1-2). மத போதகர்கள் உட்பட பலர் தேவனையும் அவருடைய நம்பிக்கையுள்ள வாழ்க்கைத் தரங்களையும் புறக்கணித்த நேரத்தில், இந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலர்களை தேவனைப் பின்பற்றுமாறு ஊக்குவித்தார் (1:12-14; 3:5-9). இந்த இரண்டு விதமான மக்களிடையே தேவன் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் நாள் வருமென்று சொல்லி மக்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ மல்கியா அழைத்தார். சுதந்திரமான கன்றைப் போல, விசுவாசமுள்ளவர்கள் “நீதியின் சூரியன், செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்தோடு உதிக்கும்போது” அனுபவிக்கும் சொல்லிமுடியாத மகிழ்ச்சியை எதிர்பாராத விதத்தில் இந்தப் பகுதியில் மல்கியா ஒப்பிட்டுக் காட்டுகிறார் (4:2).
உண்மையுள்ள சுதந்திரம் எல்லா மக்களுக்கும் கிடைக்கப்பெறும் நல்லச் செய்தியைக் கொண்டுவரும் இயேசுவே இந்த வாக்குத்தத்தத்தை இறுதியாக நிறைவேற்றுபவர் (லூக்கா 4:16-21). ஒரு நாள் தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட கிரியைகளாய், இந்த சுதந்திரத்தை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். அங்கே சுதந்திரமாய் இருப்பது விவரிக்கமுடியாத மகிழ்ச்சியாய் இருக்கும்!
இயேசுவுக்குள் நீங்கள் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை எவ்வாறு அனுபவித்தீர்கள்? இந்த மகிழ்ச்சிக்கு வேறு எந்தக் கற்பனையை ஒப்பிடுவீர்கள்?
இயேசுவே, நீர் மட்டும் அளிக்கும் சுதந்திரத்தை நினைவுகூர்ந்து, அதிலே மகிழ்ச்சியோடு வாழ எனக்கு உதவிச் செய்யும்.