நான் வளர்ந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை சந்தை நாள். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நான் ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரை நினைவுகூறுகிறேன். ஹேன்சன்ஸ் நோயினால் (தொழுநோய்) விரல்களும், கால்விரல்களும் அரித்து விட்ட நிலையில், அவள் தன்னுடைய பாயின் மீது குனிந்து ஒரு சுரைக்காயைக் கொண்டு தன்னுடைய விளைச்சலை எடுத்துக்கொண்டு இருப்பாள். சிலர் அவளைத் தவிர்த்தனர். அவளிடம் தவறாமல் வாங்குவதை என் தாயார் ஒரு முக்கிய விஷயமாகக் கருதினார். நான் அவளை சந்தை நாட்களில் மட்டும் பார்ப்பேன். பின்னர் அவள் ஊருக்கு வெளியே மறைந்து விடுவாள். 

பழங்கால இஸ்ரவேலர் காலத்தில், தொழுநோய் உள்ளவர்கள் பாளயத்துக்கு புறம்பே வாழ வேண்டும். இது ஒரு கேவலமான வாழ்க்கை. இப்படிப்பட்டவர்களைக் குறித்து “அவர்கள் தனியே குடியிருக்க வேண்டும்” (லேவியராகமம் 13:46) என்று இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட சட்டம் கூறுகிறது. பாளயத்துக்குப் புறம்பே பலியிடப்பட்ட காளைகளின் சடலங்கள் எரிக்கப்பட்டன (4:12). நீங்கள் இருக்கவேண்டிய இடம் பாளயத்துக்குப் புறம்பே அல்ல.

இந்தக் கடினமான உண்மை எபிரெயர் 13ல் இயேசுவைக் குறித்து சொல்லப்படும் கூற்றுக்கு உயிர் கொடுக்கிறது. “ஆகையால் நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் போகக்கடவோம்” (வச. 13) நாம் எபிரெயருடைய பலி செலுத்தும் முறையை ஆராயும்போது, இயேசு நகர வாசலுக்குப் புறம்பே சிலுவையில் அறையப்பட்டது ஒரு முக்கியமான அம்சமாகும். 

நாம் பிரபலமாக இருக்கவும், கௌரவப்படவும், வசதியான வாழ்க்கை வாழவும் விரும்புகிறோம். ஆனால் “பாளயத்துக்குப் புறம்பே” அவமானம் இருக்கும் இடத்திற்குச் செல்ல தேவன் அழைக்கிறார். அங்கு தான் ஹேன்சன்ஸ் நோய் கொண்டிருக்கும் விற்பனையாளர்களை நாம் பார்க்கமுடியும். அங்குதான் உலகத்தால் நிராகரிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடியும். அங்கு தான் இயேசுவையும் சந்திக்க முடியும்.