தன்னுடைய தாத்தாவின் படைப்பை நினைவுகூறும் வகையில் பீட்டர் கிராஃட் – “வேதாகமம், எந்தப் பதிப்பில் இருந்தாலும், அதை எடுப்பவர்கள், அதை புரிந்துக்கொள்வது மட்டுமல்லாமல், வேதத்தை ஜீவனுள்ள பத்திரமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல இப்போதும் பொருத்தமானதாகவும், ஆபத்தானதாகவும், உற்சாகமூட்டுகிறதாயும் இருக்கிறதை அனுபவிக்க வேண்டுமென்றும்” எழுதுகிறார். இளைஞர்கள் மத்தியில் ஊழியம் செய்த, பீட்டருடைய தாத்தா ஜெ.பி. ஃபிலிப்ஸ், இரண்டாம் உலகப்போரின்போது, தன்னுடைய ஆலயத்தில் இருக்கும் மாணவர்களுக்கு உயிரூட்டும் வகையில் ஆங்கில வேதாகமத்தின் புதிய பொழிப்புரையை மேற்கொண்டார்.
ஃபிலிப்புடைய மாணவர்களைப் போல – மொழிபெயர்ப்பின் காரணமாக மட்டுமல்ல – வேதத்தை வாசிக்கவும், அதை அனுபவிக்கவும் தடைகளை எதிர்கொள்கிறோம். நேரம், ஒழுக்கம் அல்லது புரிந்துகொள்ள சரியான கருவிகள் இல்லாதிருக்கலாம். ஆனால் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று சங்கீதம் 1:1-2 கூறுகிறது. வேதத்தை அனுதினமும் தியானிக்கும்போது, நாம் எல்லா சூழ்நிலைகளிலும், எப்பேற்ப்பட்ட கடினமானதாக இருந்தாலும், நாம் தழைக்க முடியும்.
நீங்கள் வேதத்தை எவ்வாறு காண்கிறீர்கள்? இன்றும் வாழ்வதற்கான நுண்ணறிவுடன் இயேசுவை விசுவாசித்து அவரை பின்பற்றுவதற்கான அழைப்பு ஆபத்தானதாகவும், தேவனையும், மனுகுலத்தையும் மிக நெருக்கமாக அறிந்துக்கொள்ள உற்சாகமூட்டுகிறதற்கு பொருத்தமாகவும் இருக்கிறது. நமக்கு தினமும் வாழ்வதற்கு தேவைப்படும் நீர்க்கால்களை (வச. 3) போல இருக்கிறது. இன்றைக்கு அவரைச் சார்ந்துக்கொண்டு, நேரத்தைக் கொடுத்து, சரியான கருவிகளைப் பெற்றுக்கொண்டு, வேதத்தை ஜீவனுள்ள பத்திரமாக அனுபவிக்க தேவன் உதவிசெய்ய கேட்போம்.
வேதத்தை வாசிக்க நீங்கள் என்ன தடைகளை எதிர்கொள்கிறீர்கள்? தேவனுடைய சத்தத்தைக் கேட்க நீங்கள் என்ன செய்வீர்கள்?
தேவனே, வேதத்தை ஜீவனுள்ள பத்திரமாக அனுபவிக்க எனக்கு உதவி செய்யும்.