ஒரு தேசிய வனப்பகுதியில், தேன் காளான் என்று பரவலாக அறியப்படும் ஒரு வகை பூஞ்சை 2,200 ஏக்கர் பரப்பளவில் மரத்தின் வேர்வழியாகப் பரவுகிறது. இது, இதுவரை கண்டிராத மிகப் பெரிய உயிரினமாகும். இது ஆயிரம் மடங்கிற்கு மேலாக தன்னுடைய கருப்பு குறுகு நீள்படிவ இழைகளை வனத்திற்கு இடையில் நெய்து, மரங்கள் வளரும்போதே அவைகளை கொன்றுவிடுகிறது. “ரைஸோமார்ஃப்ஸ்” என்று இந்த குறுகு நீள்படிவ இழைகள், மண்ணுக்குள் சுமார் பத்து அடி ஆழம் மட்டும் சுரங்கம் போல் ஊடுறுவுகிறது. இந்த உயிரினம் நம்ப முடியாத அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தாலும், அது ஒரு ஒற்றை நுண்துளை போல ஆரம்பமானது.
ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று என்று வேதம் கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் – ஆதாம் மற்றும் இயேசு – ஆகிய இரு நபர்களை வேறுபடுத்திக் காண்பிக்கிறார் (ரோமர் 5:14-15). ஆதாமுடைய பாவம் எல்லா மனுஷருக்கும் ஆக்கினையும் மரணமும் கொண்டுவந்தது (வச. 12). ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷரும் பாவிகளாகி, தேவனுக்கு முன்பாக ஆக்கினைக்கு நிற்கவேண்டியிருந்தது (வச. 17). ஆனால் மனுக்குலத்தின் பாவப் பிரச்சனையை கையாள அவருக்கு ஒரு வழி இருந்தது. சிலுவையில் இயேசுவின் நீதியான செயலினிமித்தம் தேவன், நித்திய ஜீவனையும், அவர் முன் நிற்கும்படியான உரிமையையும் கொடுக்கிறார். கிறிஸ்துவின் அன்பு மற்றும் கீழ்படிந்த செயல், ஆதாமின் ஒரே கீழ்படியாமையை மேற்கொள்ளும் வல்லமையுடையதாயும், எல்லாருக்கும் ஜீவனைக் கொடுக்க வல்லமை வாய்ந்ததாயும் இருந்தது (வச. 18).
இயேசு தம்முடைய சிலுவை மரணத்தினால், அவரை விசுவாசிக்கும் யாவருக்கும் நித்திய ஜீவனை அளிக்கிறார். நீங்கள் இன்னும் அவருடைய மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெறவில்லையென்றால், இன்றைக்கே அதைச் செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு விசுவாசியாயிருந்தால், அன்பினிமித்தம் அவர் செய்த மகா பெரிய செயலுக்காக அவரைத் துதியுங்கள்.
ஆதாமும் இயேசுவும் செய்த ஒரே செயல்கள், பாவத்தின்மேல் ஏற்பட்ட தாக்கத்தைக் குறித்து என்ன சொல்லுகிறது? இயேசுவின் தியாகம், அவரைக் கனப்படுத்துகிற வாழ்க்கை வாழ எவ்வாறு உங்களை ஏவுகிறது அல்லது தூண்டுகிறது?
தேவனே, இயேசுவின் மூலம் நீர் கொடுத்த இரட்சிப்புக்காகவும் நித்திய ஜீவனுக்காகவும் நன்றி. உம்முடைய இரட்சிப்பின் வழிகளை அநேகருக்கு வெளிப்படுத்த உதவி செய்யும்.