அமெரிக்காவின் ஒரு சிறிய ஊரிலிருந்து உருவாகிய வெட்டுக்கிளிகள், 1800 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தேசத்தின் பயிர்களை நாசம் செய்தது. விவசாயிகள், வெட்டுக்கிளிகளை பிடிப்பதற்கு தாரை ஊற்றியும், அதின் முட்டைகளை அடியோடு அழிக்க தங்கள் வயல்களை எரிக்கவும் செய்தனர். பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த மக்கள், தேவனுடைய உதவியை நாடும்பொருட்டு, மாநிலந்தழுவிய ஜெப நாளை ஒழுங்குசெய்ய தீர்மானித்தனர். ஏப்ரல் 26ஐ ஜெப நாளாக ஜனாதிபதி அறிவித்தார்.
எல்லோரும் சேர்ந்து ஜெபித்த பின், தட்பவெப்பநிலை சீராக, முட்டைகளிலிருந்து வெட்டுக்கிளிகள் மீண்டும் உயிர்பெறத் துவங்கியது. ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் நான்கு நாட்களில் ஏற்பட்ட தட்பவெப்பநிலை அந்த வெட்டுக்கிளிகளை அடியோடு அழித்தது. மக்கள் மீண்டும் சோளம், கோதுமை போன்ற தானியங்களை அறுவடை செய்யத் துவங்கினர்.
யோசபாத் ராஜாவின் நாட்களில் மக்களைப் பாதுகாத்ததற்கு ஜெபமே ஆதாரமாயிருக்கிறது. பெரிய இராணுவம் நம்மை நோக்கி வருகிறது என்பதைக் கேள்விப்பட்ட ராஜா, தேவ ஜனத்தை ஜெபிக்கும்படியாகவும் உபவாசிக்கும்படியாகவும் கேட்கிறார். தேவன் தங்களுடைய கடந்த காலத்தில் தங்களை எப்படி காத்துவந்தார் என்பதை மக்கள் நினைவுகூறுகின்றனர். இந்த அழிவு நமக்கு நேரிடும் என்றால், “எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால்” தேவன் நம் ஜெபத்தைக் கேட்டு நம்மை இரட்சிப்பார் என்பதை அறிவோம் என்று யோசபாத் அறிவிக்கிறார் (2 நாளாகமம் 20:9).
எதிரிகளின் கைகளிலிருந்து தேவன் தன்னுடைய ஜனத்தை மீட்டுக்கொண்டார். நம்முடைய இக்கட்டில் அவரை நோக்கி கதரும்போது அவர் நம் ஜெபத்தைக் கேட்கிறார். உங்களுடைய தேவைகள் எதுவாயினும், உறவு விரிசலோ அல்லது அச்சுறுத்தும் எந்த பிரச்சனையோ, ஜெபத்தில் தேவனிடத்தில் முறையிடுங்கள்; அவரால் கூடாதது ஒன்றுமில்லை.
உன்னுடைய ஜெபத்திற்கு தேவன் எவ்வாறு பதில் கொடுத்தார்? உன்னுடைய வாழ்க்கையின் எந்த பிரச்சனையை இன்று தேவனிடத்தில் முறையிடப் போகிறீர்கள்?
சிருஷ்டிப்பின் தேவனே, நீரே உலகத்தையும் அதிலுள்ளவைகளையும் உண்டாக்கிய தேவன். சூழ்நிலையை மாற்றி, நீர் நேசிக்கிற உம்முடைய ஜனத்தை மீட்டுக்கொள்ளும்.