அது ஒரு மின்னல் புயல். எனது ஆறு வயது மகளும் நானும் அமர்ந்துகொண்டு கண்ணாடி கதவின் வழியாக பளிச்சென்று மின்னிய அந்த மின்னல் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். “ஓ!… தேவன் எவ்வளவு பெரியவர்” என்று என்னுடைய மகள் சொல்லிக்கொண்டேயிருந்தாள். நானும் அதையேதான் யோசித்தேன். நாங்கள் எவ்வளவு சிறியவர்கள், தேவன் எவ்வளவு பெரியவர் என்று எங்களுக்கு தெளிவாய் தெரிந்தது. யோபு புத்தகத்தில், “வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?” என்னும் கேள்வி எனக்கு நினைவுக்கு வருகிறது (யோபு 38:24).

தேவனுடைய வல்லமையைக் குறித்து யோபுக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது (வச. 34-41). அவனுடைய வாழ்க்கை சிதைந்துபோனது. அவனுடைய பிள்ளைகள் மரிந்துபோனார்கள். அவன் உடைக்கப்பட்டான். வியாதிப்பட்டான். அவனுடைய நண்பர்கள் அவனிடத்தில் கரிசணையோடு இல்லை. அவனுடைய மனைவி அவனுடைய விசுவாசத்தை விட்டுவிட ஊக்குவித்தாள் (2:9). கடைசியில் யோபு தேவனைப் பார்த்து “ஏன்” என்று கேள்வியெழுப்புகிறான் (அதி. 24). தேவன் பெருங்காற்றிலிருந்து அவனுக்கு பதில்கொடுக்கிறார் (அதி. 38). 

உலகத்தில் காணக்கூடிய அனைத்து காரியங்களிலும் தேவனுடைய ஆளுகையை தேவன் யோபுக்கு நினைவுபடுத்துகிறார் (அதி. 38). யோபு தேற்றப்பட்டு, “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” (42:5) என்று பதிலளிக்கிறான். வேறுவிதமாய் சொன்னால், “இப்போது புரிந்துகொண்டேன், தேவனே! நீர் என்னுடைய வட்டத்திற்குள் பொருந்துகிறவரல்ல” என்று ஒத்துக்கொண்டான். 

வாழ்க்கை சிதறடிக்கப்படும்போது, நாம் செய்ய வேண்டிய மிக ஆறுதலான காரியம் என்னவெனில், கீழே அமர்ந்து மின்னல் மின்னுவதைப் பாருங்கள். இந்த உலகத்தை உண்டாக்கிய ஆண்டவர் எவ்வளவு பெரியவர் என்று உங்களை தேற்றிக்கொள்ளுங்கள். தேவனுடைய மகத்துவத்தையும் பராக்கிரமத்தையும் வெளிப்படுத்துகிற பாடல்களை தேர்ந்தெடுத்துப் பாடுவதின் மூலமும் அந்த விசுவாசத்தை நீங்கள் கட்ட முயற்சிக்கலாம்.