கை கழுவும் தொட்டியில் தங்கள் கைகளை கழுவும்போது, இரண்டு சிறுவர்களும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை இரண்டுமுறை பாடினார்கள். “கைகளில் உள்ள கிருமிகளை கழுவி சுத்தம்செய்வதற்கு அவ்வளவு நேரம் தேவைப்படும்” என்று அவர்களுடைய அம்மா சொல்லியிருக்கிறார்கள். கோவிட்-19 தொற்று பரவத்துவங்கும் முன்னரே, தங்கள் கைகளை நன்றாய் கழுவி சுத்தம்செய்ய இவர்கள் பழகிக்கொண்டனர். 

இந்த தொற்று பரவிய நாட்களில், நம்மைச் சார்ந்த அனைத்தையும் சுத்தமாக வைக்கும் கடினமான பழக்கத்தைக் கற்றுக்கொண்டோம். ஆனால் நம்முடைய பாவத்தைக் கழுவி சுத்திகரிப்பது, நம்மை தேவனிடமாய் திருப்பும். 

யாக்கோபு, ரோம சாம்ராஜ்யம் எங்கிலும் சிதறிக்கிடந்த கிறிஸ்தவர்களை தேவனிடமாய் திருப்பும்படிக்கு அறிவுறுத்துகிறார். சண்டை சச்சரவுகள், சுயமேம்பாட்டு யுத்தங்கள், ஆஸ்திகள், உலக இன்பங்கள், பணம், புகழ், ஆகியவைகள் அவர்களை தேவனுக்கு விரோதிகளாய் மாற்றிவிட்டது. ஆகையினால் யாக்கோபு, “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்… பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்” என்று அவர்களை எச்சரிக்கிறார் (யாக்கோபு 4:7-8). ஆனால் அதை செய்வது எப்படி? 

“தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” (வச. 8). இந்த வார்த்தைகள் தேவனிடமாய் திரும்புவதின் அவசியத்தை உணர்த்துவதின் மூலமாய், பாவத்தை வேறோடு அகற்றும் கிருமிநாசினியாய் செயல்படுகிறது. யாக்கோபு தொடர்ந்து, சுத்திகரிக்கும் முறையை அறிவிக்கிறார்: “நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (வச. 9-10). 

பாவத்தைக் கழுவுதல் என்பது நம்மை முற்றிலும் தாழ்த்துவதாகும். ஆனால். அல்லேலூயா! நம்முடைய “சுத்திகரித்தலை” ஆராதனையாய் மாற்றுவதற்கு தேவன் உண்மையுள்ளவர்.