“அதின் வழியாய் ஓர் ஆறு கடந்து செல்கிறது” – இது நார்மன் மெக்லீனின் தலைசிறந்த ஒரு கதை. அமெரிக்காவின் மேற்கத்திய மாகாணத்தில் உள்ள பிரஸ்பிடேரியன் திருச்சபையின் போதகரையும் அவருடைய இரண்டு மகன்களையும் குறித்த கதை. ஞாயிற்றுக் கிழமை காலையில் பொதுவாக நார்மன் மற்றும் அவனுடைய சகோதரன் பால் ஆகிய இருவரும் தங்கள் அப்பாவுடைய பிரசங்கத்தைக் கேட்பதற்கு திருச்சபை செல்வது வழக்கம். ஞாயிற்றுக் கிழமை மாலையிலும் ஆராதனை இருக்கும். இடைப்பட்ட நேரத்தில் அப்பா தன் இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு நீரோட்டம் பாயும் மலைப்பாதைகளில் உலாவச் செல்வார். தன் ஆத்துமாவை உயிர்பிக்கவும், மாலை பிரசங்கத்திற்கு தன்னை மனரீதியாய் ஆயத்தப்படுத்தவும், அதை அவர் சுயநினைவோடே தொடர்ந்து செய்துவந்தார்.

இயேசு மலைகளிலும் பட்டணங்களிலும் அநேகருக்கு போதனை செய்வதையும், அவரிடத்தில் கொண்டுவரப்பட்ட வியாதியஸ்தர்களை சுகமாக்கியதையும் சுவிசேஷஷமெங்கிலும் பார்க்கமுடியும். இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்னும் தனது வேலையை இயேசு உண்மையாய் செய்தார் (லூக். 19:10). ஆனாலும் அடிக்கடி கூட்டத்தை விட்டு தன்னை தனிமைப்படுத்துவதை பார்க்கமுடியும் (5:16). அந்த தனிமையில் தன் பிதாவோடு நேரம் செலவழித்து, பூமியில் தனக்கு பிதாவினால் ஒப்புவிக்கப்பட்ட வேலையைத் தொடர்ந்து செய்ய தன்னை பலப்படுத்திக்கொள்வது இயேசுவின் வழக்கம்.

நம்முடைய ஊழியப்பாதையில் இயேசுவின் இந்த தனிமைப்படுத்தலை நினைவுகூறுவது நல்லது. இயேசுவுக்கே இந்த தனிமை அவசியப்பட்டதென்றால், நாம் எம்மாத்திரம்? நம்மை பொங்கி வழிந்தோடச் செய்யும் தேவனோடு தனிமையில் நேரம் செலவழிக்கப் பழகுவோம்.