எங்கள் காணொலிக் காட்சியின் தலைவர், “காலை வணக்கம்!” சொன்னார். நானும் பதிலுக்கு “ஹலோ” சொன்னேன். ஆனால் நான் அவரைப் பார்க்கவில்லை. காணொலியில் என்னுடைய தோற்றம் எனக்கு இடைஞ்சலாய் இருந்தது. நான் இப்படியா இருக்கிறேன்? அந்த காணொலி கூடுகையில் எங்களோடு இணைந்த மற்றவர்களின் சிரித்த முகங்களையும் பார்த்தேன். அது அவரவரின் தோற்றத்தை சரியாய் காண்பித்தது. ஆக, இது நானாகத்தான் இருக்கமுடியும். நான் சற்று எடையைக் குறைக்கவேண்டும்; முடிவெட்ட வேண்டும்.
பார்வோனுடைய எண்ணத்தில் அவன் மேன்மையானவனாய் தெரிந்தான். அவன் “ஜாதிகளுக்குள்ளே.. பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்.. பெருந்தண்ணீர்களில் முதலையை” போன்று இருந்தவன் (எசே. 32:2). ஆனால் தேவனுடைய பார்வையில் அவன் யார் என்பது அறிவிக்கப்படுகிறது. அவனுடைய சரீரத்தை மிருகஜீவன்களுக்கு இரையாக்குவான் என்றும், “அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன் ; அவர்களின் ராஜாக்கள்…மிகவும் திடுக்கிடுவார்கள்” (வச. 10) என்றும் உரைக்கிறார். தன்னைக் குறித்து மேன்மையான எண்ணத்திற்கு பார்வோன் தகுதியுள்ளவன் இல்லை.
தேவன் நம்முடைய பாவத்தை பார்க்கும்பார்வையில் நாம் நம்மை பார்க்காத வரையில், நம்முடைய ஆவிக்குரிய தோற்றம் நமக்கு அழகாய் தெரியலாம். தேவனுடைய பரிசுத்த வரையறைக்கு ஒப்பிடும்போது, நம்முடைய “நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது” (ஏசா. 64:6). ஆனால் தேவன் நிஜமான வேறொன்றை நம்மில் பார்க்கிறார்: அவர் இயேசுவைப் பார்க்கிறார், இயேசுவில் நம்மைப் பார்க்கிறார்.
உன்னுடைய தோற்றத்தைக் குறித்து சோர்ந்துபோயிருக்கிறாயா? உன்னுடைய தோற்றம் உண்மையில் நீங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசுவை நம்பினால், அவரில் நிலைத்து, அவருடைய பரிசுத்தம் உன்னை மூடும்படி செய்யலாம். அப்போது, நீ கற்பனை செய்ததைக் காட்டிலும் அழகாய் தெரிவாய்.
உன்னைக் குறித்து நீ என்ன எண்ணுகிறாய்? உனக்கான தேவசாயலோடு எவ்வாறு அது ஒத்துபோகிறது?
இயேசுவே, உம்மை சார்ந்துகொள்கிறேன். உம்முடைய சிநேகமும் நன்மையும் என்னை அழகாக்குகிறது.