வாழ்க்கையின் எந்த பருவத்தில் ஒரு மனிதன் முதிர்ச்சியடைகிறான் என்னும் புள்ளிவிபர கணக்கிற்கான கேள்வியுடன் சமீபத்தில் பலரை அனுகினர். தாங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டோம் என்று நம்புகிற பலர், குறிப்பிட்ட சில சுபாவங்களை சுட்டிக்காண்பித்து தங்களுடைய முதிர்ச்சியை ஆதாரமாய் காண்பித்தனர். வரவுசெலவைத் திட்டமிட்டு, சொந்தமாக வீடு வாங்கியதே முதிர்ச்சிக்கு அடையாளமாய் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. மேலும், சமைத்தல், மருத்துவரைச் சந்திக்க முன்பதிவுசெய்தல், நொறுக்குத் தீனியை தானே தேர்ந்தெடுத்தல் போன்ற வேடிக்கையான பதில்கள், அல்லது இரவில் தனியே நடந்துசெல்லுதல் போன்ற பல்வேறு காரியங்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

வேதாகமமும் நாம் ஆவிக்குரிய முதிர்ச்சியடையவேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கிறது. பவுல் எபேசு சபைக்கு எழுதும்போது, சபையின் மக்களை “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்…” என்று உற்சாகப்படுத்துகிறார் (எபே. 4:11). நம்முடைய விசுவாசத்தில் குழந்தைகளாயிருந்தபோது, நமக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்திய “காற்றினாலே அலைகளைப்போல அடிபட்(ட)” பலவித போதனைகளுக்கு செவிசாய்த்தோம். அதற்கு பதிலாக, சத்தியத்தைக் குறித்த அறிவில் முதிர்ச்சியடையும்போது, “தலையாகிய கிறிஸ்துவுக்குள்” (வச. 15) ஒன்றாக்கப்பட்ட சரீரமாய் செயல்படுகிறோம்.

தேவன் யார் என்று அறிகிற பூரண அறிவில் தேறுவதற்கு அவருடைய ஆவியை நமக்கு தருகிறார் (யோவான் 14:26). அத்துடன், விசுவாச முதிர்ச்சிக்கு நேராய் நம்மை வழிநடத்துவதற்கு மேய்ப்பர்கள் மற்றும் போதகர்களை தேவன் கொடுத்துள்ளார் (எபே. 4:11-12-13). நம்முடைய சரீர முதிர்ச்சியை அடையாளப்படுத்த சில காரியங்கள் இருப்பதுபோல, தேவனுடைய சரீரத்தின் அவயவங்களாய் ஒன்றிணைவதே ஆவிக்குரிய முதிர்ச்சிக்கான அடையாளம்.