வேளிநாட்டவரான ட்ரூத் என்று அழைக்கப்படுகிற “இசபெல்லா பாம்ஃப்ரீ” என்ற பெண், 1797இல் நியூயார்க்கில் அடிமையாய் பிறந்தவள். அவளுடைய எல்லா குழந்தைகளும் அடிமைகளாகவே விற்கப்பட்டாலும்; 1826இல் அவளும் அவளுடைய மகளும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தங்களை பணம்கொடுத்து விடுவித்த அந்த குடும்பத்துடனே தங்கிக்கொண்டனர். தன்னுடைய குடும்பத்தை சிதறடித்த இந்த அநீதியான அடிமைத்தன வாழ்க்கையோடு பழக விரும்பாமல், தன்னுடைய இளைய மகன் பீட்டரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டாள் – அந்த நாட்களில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணுக்கு இது ஒரு அற்புதமான சாதனையாகும். தேவனுடைய துணையில்லாமல் தன் பிள்ளைகளை வளர்க்கமுடியாது என்று நம்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தேவனுடைய சத்தியத்தில் தன் வாழ்க்கைக்கு அஸ்திபாரம்போட்டதற்கு அடையாளமாய் தன் பெயரை sojourner truth (வெளிநாட்டு சத்தியம்) என்று மாற்றிக்கொண்டாள். நீதிமொழிகள் 14ன் ஆசிரியரான சாலமோன் ராஜா, “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்” (வச. 1) என்று கூறுகிறார். அதற்கு மாறாக, “புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.” தேவனுடைய ஞானத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த வீடுகட்டுகிற உருவகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தியோடு கட்டுவது எப்படி? மற்றவர்களை கட்டியெழுப்புகிற வார்த்தைகளை பேசுவதின் மூலமாக (எபே. 4:29; 1 தெச. 5:11) அதைச் செய்யமுடியும். தன் வீட்டை இடித்துப்போடுவது எப்படி? நீதிமொழிகள் 14 அதற்கும் பதிலளிக்கிறது. “மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு” (வச. 3).
கடிமான தருணத்தில் தேவனிடத்தில் அடைக்கலம் புகுந்த இந்த “இசபெல்லாவிற்கு” என்ற பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தேவ ஞானத்திற்காய் நன்றி. உங்களுடைய பிள்ளைகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் தேவை உங்களுக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் அந்த பெண் தன் வீட்டைக் கட்டியதுபோல், “தேவ ஞானம்” என்னும் அஸ்திபாரத்தின் மீது நம் வீட்டை கட்டவேண்டியது அவசியம்.
உங்கள் வீடு எந்த அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டுள்ளது? இந்த வாரத்தில் உங்கள் வீட்டை எதின் மீது கட்டப்போகிறீர்கள்?
தகப்பனே, உம்முடைய நீங்காத மகிமையிலே ஒரு முன்னுதாரணமான வாழ்க்கையைக் கட்டுவதற்கு எனக்கு ஞானம் தேவை.