பதினான்கு வயது சிறுவனைக் கொலைசெய்த குற்றத்திற்காக 1983ஆம் ஆண்டு மூன்று வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர். “சிறுவனின் தடகள சட்டைக்காய் அவன் சுடப்பட்டான்” என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. கைதுசெய்யப்பட்ட இந்த மூன்று வாலிபர்களும் குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கப்படுவதற்குள் அவர்கள் 36 ஆண்டுகள் சிறைக் கம்பிகளுக்கு பின்பாக செலவிடவேண்டியிருந்தது. ஆம், அந்த கொலையை செய்தது வேறொரு நபர். அந்த மூவரையும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து அவர்களை விடுவிக்குமுன், அந்த நீதிபதி அவர்களிடம் மன்னிப்புகேட்டார்.

எவ்வளவுதான் நாம் முயற்சிசெய்தாலும் (நம்முடைய அதிகாரிகள் எவ்வளவு நன்மைகளை செய்திருந்தாலும்) மனிதனுடைய நீதி பெரும்பாலும் குறைவுள்ளதாகவே இருக்கிறது. நாம் எப்போதும் எல்லா விவரங்களையும்  தெரிந்தவர்கள் அல்ல. சிலநேரங்களில் நேர்மையற்றவர்கள், நிஜத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கின்றனர். சிலநேரங்களில் நாமே தவறு செய்கிறோம். தவறுகளை சரிசெய்வதற்கு பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால், இந்த சிக்கலான மனிதர்களை போலல்லாமல், தேவன் சரியான நீதியை வழங்குகிறார். “அவர் கிரியை உத்தமமானது” என்றும் “அவர் வழிகளெல்லாம் நியாயம்” என்றும் மோசே கூறுகிறார் (உப. 32:4). தேவன் உள்ளதை உள்ளதென்று பார்க்கிறார். சிலவேளைகளில் நாம் தவறிழைத்தாலும் கடைசியில் தேவன் அவைகளை நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார். அது எப்போது என்பது துல்லியமாய்  தெரியவில்லை என்றாலும், நாம் நம்பிக்கையோடு சேவிக்கிற தேவன், “நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்” (வச. 4).

எது சரி, எது தவறு என்று தீர்மானிக்கமுடியாத ஒரு குழப்பமான பாதையில் நாம் நடக்கலாம். நமக்கு அல்லது நம்மை சார்ந்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை காலத்திற்கும் சரிசெய்யமுடியாதோ என்று ஒருவேளை நாம் பயப்படலாம். ஆனால் இம்மையிலோ அல்லது மறுமையிலோ, நமக்கான நீதியை நிச்சயமாய் நிலைநாட்டும் நம்முடைய நீதியின் தேவனை முழுமையாய் நம்ப முற்படுவோம்.