உலகின் மிக ஆழமான ஏரியான பைக்கால் ஏரி, மிகவும் பரந்து விரிந்த அற்புதமான ஏரி. 49 மைல் (79 கி.மீ.) குறுக்கே ஒரு மைல் ஆழத்தையும் கிட்டத்தட்ட 400 மைல் (636 கி.மீ) அளவையும் கொண்டு, இது உலகின் அனைத்து நண்ணீரில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த நீர் பெரும்பாலும் அணுக முடியாதது. பைக்கால் ஏரி சைபீரியாவில் அமைந்துள்ளது. இது ரஷ்யாவின் மிக தொலைதூரப் பகுதிகளில் ஒன்றாகும். நமது கிரகத்தின் பெரும்பகுதிக்கு தண்ணீர் அத்தியாவசியமான ஒரு தேவை என்றபோதில், மக்கள் யாரும் போக முடியாத இந்த இடத்தில் இவ்வளவு தண்ணீர் இருப்பது முரண்பாடான ஒரு காரியம்.
பைக்கால் ஏரி தொலைதூரத்தில் இருந்தாலும், முடிவில்லாத வாழ்வாதாரமான தண்ணீர் இங்கு கிடைக்கிறது. அதின் தேவை அதிகம் உள்ளவர்களுக்கே அது கிடைக்கிறது. சமாரியாவில் ஒரு கிணற்றினருகே இயேசு இருந்தபோது, ஒரு பெண்ணுடன் உரையாடினார். அவளுடைய ஆழ்ந்த ஆன்மீக தாகத்தின் ஓரங்களை ஆராய்ந்தார். அவளுடைய உள்ளத்தின் ஏக்கத்திற்கு தீர்வு? இயேசு மட்டுமே.
கிணற்றிலிருந்து எடுக்க வந்த தண்ணீருக்கு மாறாக, இயேசு அதைவிடச் சிறந்த ஒன்றை வழங்கினார்: “இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்” (யோவான் 4: 13-14).
பல விஷயங்கள் திருப்தியை உறுதிப்படுத்துகின்றன, ஆனால் ஒருபோதும் நம் இருதயத்தின் தாகத்தை முழுமையாகத் தணிக்காது. இயேசுவால் மட்டுமே நம்முடைய ஆன்மீக தாகத்தை உண்மையிலேயே பூர்த்தி செய்யமுடியும். அனைவரது தேவைகளையும், எல்லா இடங்களிலும் அவர் சந்திக்கிறார்.
வாழ்க்கையில் பூர்த்தி நிலை அல்லது திருப்தியை நீங்கள் எங்கே தேடுகிறீர்கள்? கிறிஸ்துவைத் தவிர உண்மையான திருப்திக்கான தேடல் ஏன் சாத்தியமற்றது?
அன்புள்ள தேவனே, நீர் வழங்கிய வாழ்க்கைக்கும், நீர் எனக்குக் கொடுக்கும் நோக்கத்திற்கும் அர்த்தத்திற்கும் நன்றி. உம்மிலும் உம் அன்பிலும் என் உண்மையான திருப்தியைக் கண்டுபிடிக்க எனக்குக் கற்றுக்கொடும்.