Archives: ஏப்ரல் 2021

அலைகள் மேல் சவாரி

என் கணவர் அடிவானத்தின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பாறை மிகுந்த கடற்கரையில் உலாவும்போது, மற்றுமொரு மருத்துவ பின்னடைவால் கவலைக்கு உள்ளாகி நான் ஒரு பெரிய பாறையில் அமர்ந்தேன். நான் வீடு திரும்பும்போது என் பிரச்சினைகள் எனக்காகக் காத்திருக்கும் என்றாலும், அந்த தருணத்தில் எனக்கு அமைதி தேவைப்பட்டது. உள்வரும் அலைகள் கருப்பு, துண்டிக்கப்பட்ட பாறைகளுக்கு எதிராக மோதுவதை நான் உறுத்துப் பார்த்தேன். அலையின் வளைவுகளில், ஒரு இருண்ட நிழல் என் கண்களை கொள்ளை கொண்டது. எனது கேமராவில் உள்ள பெரிதாக்கி அருகில் காணும் (ஜூம்) முறையை பயன்படுத்தி, அந்த வடிவத்தை அலைகளின் மேல் அமைதியாக சவாரி செய்யும் கடல் ஆமை என அடையாளம் கண்டு கொண்டேன். அதன் தட்டையான கை போன்ற உறுப்புகள் அகலமாக விரிக்கப்பட்டும் இயக்கம் இல்லாமல் அசைவற்றும் இருந்தன. முகத்தை உப்பிடப்பட்ட மென்காற்றுக்குள் திருப்பி, நான் சிரித்தேன்.

“வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும்” (சங்கீதம் 89:5). எங்கள் ஒப்பிடமுடியாத தேவன் ஆட்சி செய்கிறார். “தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது (தேவன்) அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்” (வச. 9). “பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்” (வசனம் 11). அவர் அனைத்தையும் உருவாக்கினார், அனைத்தையும் சொந்தமாக வைத்திருக்கிறார், அனைத்தையும் நிர்வகிக்கிறார், அனைத்தையும் அவருடைய மகிமைக்காகவும், நம் இன்பத்திற்காகவும் உருவாக்கியிருக்கிறார்.

நம்முடைய விசுவாசத்தின் அஸ்திவாரத்தில் நின்று - மாறாத நம்முடைய தந்தையின் அன்பு - நம்மால் “அவரின் முகத்தின்  வெளிச்சத்தில் நடக்க” முடியும் (வச. 15). தேவன் பெரிதும் வல்லமையுள்ளவராகவும், நம்முடன் நடந்துகொள்வதில் இரக்கமுள்ளவராகவும் இருக்கிறார். நாம் “உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து” இருக்க முடியும் (வச. 16). நாம் என்ன தடைகளை எதிர்கொண்டாலும் அல்லது எத்தனை பின்னடைவுகளைச் தாங்கிக் கொண்டிருக்க நேர்ந்தாலும், அலைகள் உயர்ந்து விழும்போது தேவன் நம்மைப் பிடித்துக் கொள்கிறார்.

விலைக்கிரயம்

மைக்கேலேஞ்சலோவின் படைப்புகள் இயேசுவின் வாழ்க்கையின் பல அம்சங்களை ஆராய்ந்தன, எனினும் மிகவும் கடுமையான ஒன்று மிகவும் எளிமையானவற்றுள் ஒன்றாகும். 1540 களில் அவர் தனது நண்பர் விட்டோரியா கொலோனாவுக்காக ஒரு படத்தை (இறந்த கிறிஸ்துவின் உடலை வைத்திருக்கும் இயேசுவின் தாயின் படம்) வரைந்தார். சுண்ணாம்பில் வரையப்பட்டது. மரியாள் தனது மகனின் உடலை மடியில் கிடத்தியபடி வானத்தை நோக்கியதை சித்தரிக்கிறது. மரியாவின் பின்னிருந்து எழும்பிய சிலுவையின் மேல் உத்திரம் டான்டே சொர்க்கத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்த இந்த வார்த்தைகளை சுமந்து கொண்டிருந்தது,"எவ்வளவு இரத்தம் செலவாகும் என்பதை அவர்கள் அங்கே எண்ணிப் பார்க்கவில்லை." மைக்கேலேஞ்சலோவின் கருத்து ஆழமானது: இயேசுவின் மரணத்தைப் பற்றி நாம் நிதானிக்கும்போது, அவர் கொடுத்த விலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கிறிஸ்து செலுத்திய விலை "முடிந்தது" (யோவான் 19:30) என்ற அவரது இறக்கும் அறிவிப்பில் உள்ளது. “முடிந்தது” (டெட்டெலெஸ்டாய்) என்ற சொல் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டது - ஒரு ரசீதுக்கான பணம் செலுத்தப்பட்டது, ஒரு பணி முடிந்தது, ஒரு பலி செலுத்தப்பட்டது, ஒரு தலைசிறந்த படைப்பு முடிந்ததைக் காட்டுவதற்கு. இயேசு சிலுவையில் நம் சார்பாக செய்த காரியங்களுக்கு அவை ஒவ்வொன்றும் பொருந்தும்! ஒருவேளை அதனால்தான் அப்போஸ்தலன் பவுல் எழுதினார், “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.” (கலாத்தியர் 6:14).

நம்முடைய இடத்தை எடுக்க இயேசுவின் விருப்பம், தேவன் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு நித்திய சான்று. அவர் செலுத்திய விலையைப் பற்றி நாம் நிதானிக்கும்போது, அவருடைய அன்பையும் கொண்டாடுவோம் - சிலுவைக்கு நன்றி செலுத்துவோம்.

“மிகவும் உதவியாக”

பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.ரோமர் 12:13

கிறிஸ்தவ வானொலி நிலையத்திற்கு அழைத்தவர் தனது மனைவி அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வருவதாகக் கூறினார். பின்னர் அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் என் இதயத்தில் ஆழமாகப் பேசியது: "எங்கள் தேவாலய குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த நேரத்தில் எங்களை கவனித்துக்கொள்வதில் மிகவும் உதவியாக இருந்தார்கள்."

இந்த எளிய அறிக்கையை நான் கேட்டபோது, கிறிஸ்தவ விருந்தோம்பல் மற்றும் கவனிப்பின் மதிப்பு மற்றும் அவசியத்தை அது எனக்கு நினைவூட்டியது. வாழ்க்கையை மாற்றும் நற்செய்தியின் சக்தியை நிரூபிக்க மிகச் சிறந்த வழிகளில் ஒன்று சக விசுவாசிகளின் அன்பும் ஆதரவும் என்று நான் நினைக்க ஆரம்பித்தேன்.

முதல் பேதுருவில், அப்போஸ்தலன் ஒரு கடிதத்தை முதல் நூற்றாண்டு தேவாலயங்கள் மத்தியில் பரப்பினார்; இப்போது அது துருக்கி நாடு. அந்த கடிதத்தில், ரோமர் 12: 13-ல் தனது நண்பர் பவுல் எழுதிய ஒரு காரியத்தைச் செய்யும்படி வாசகர்களை வலியுறித்தினார்: “விருந்தோம்பலைப் பயிற்சி செய்யுங்கள்.” பேதுரு, “ஒருவருக்கொருவர் ஆழமாக நேசிக்கவும். . . விருந்தோம்பலை வழங்குங்கள், ”மேலும் தேவன் அவர்களுக்கு அளித்த பரிசுகளை“ மற்றவர்களுக்கு சேவை செய்ய ”பயன்படுத்தும்படி அவர் சொன்னார் (1 பேதுரு 4: 8-10). இயேசுவில் உள்ள அனைத்து விசுவாசிகளுக்கு சக விசுவாசிகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் அங்கு தெளிவாக உள்ளன.

அந்த அழைப்பாளரின் மனைவியைப் போன்றவர்களை நாம் அனைவரும் அறிவோம் - தேவையுள்ளவர்களுக்கு யாரோ ஒருவர் உடன் வந்து அக்கறை மற்றும் கிறிஸ்துவைப் போன்ற அன்பைக் காட்ட. தேவனின் பலத்தில், "மிகவும் உதவி செய்பவர்கள்" என்று அறியப்படுகிறவர்களுள் நாமும் ஒருவராக இருப்போம்.