ஏழாம் நூற்றாண்டில், இப்போது ஐக்கிய இராஜ்ஜியம் என்று அழைக்கப்படும் நாடு பல ராஜ்யங்களாக பிரிந்து அடிக்கடி போர் புரிந்து கொண்டிருந்தது. நார்த்தம்ப்ரியாவின் ஓஸ்வால்ட் ராஜா இயேசுவின் விசுவாசியாக மாறினபோது, அவர் தனது பகுதியில் சுவிசேஷம் அறுவிக்க ஒரு மிஷினெரியை அழைத்தார். கோர்மன் என்னும் பெயருடைய மனிதர் அனுப்பப்பட்டார், ஆனால் சரியான பலன் கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்கள் “பிடிவாதமாக,” “காட்டுமிராண்டித்தனமாக,” இருப்பதை மற்றும் அவரது பிரசங்கத்தில் அக்கறை இல்லாததையும் கண்டு, அவர் விரக்தியுடன் வீடு திரும்பினார்.
ஐடான் என்ற ஒரு துறவி கோர்மனிடம், “கற்றுக் கொள்ளாதவர்களிடம் நீங்கள் இருந்ததை விட நீங்கள் மிகவும் கடுமையாக இருந்தீர்கள்” என்று கூறினார். நார்த்ம்பிரியர்களுக்கு ” பாலை போல் மிகவும் எளிதான கோட்பாட்டை” கொடுப்பதற்கு பதிலாக, புரிந்துகொள்ள முடியாதவற்றை கோர்மன் பிரசங்கித்திருந்தார். ஐடன் நார்தம்பிரியாவுக்குச் சென்று , தனது பிரசங்கத்தை மக்களின் புரிதலுக்கு ஏற்றவாறு மாற்றினார் , ஆயிரக்கணக்கானோர் இயேசுவை விசுவாசித்தார்கள்.
ஐடனுக்கு இந்த முக்கியமான அணுகுமுறை வேதத்திலிருந்து கிடைத்தது. பவுல் கொரிந்தியரிடம், “நீங்கள் பெலனில்லாதவர்களானதால் உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்” (1 கொரிந்தியர் 3:2). சரியான வாழ்க்கை மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதற்கு முன்பு, இயேசுவைப் பற்றிய அடிப்படை போதனை, மனந்திரும்புதல் மற்றும் ஞானஸ்நானம் ஆகியவற்றைப் மக்கள் புரிந்திருக்க வேண்டும் (எபிரெயர் 5: 13–6: 2). முதிர்ச்சி பின்பற்றப்பட வேண்டும் (5:14), வரிசையை தவறவிடக்கூடாது. இறைச்சிக்கு முன் பால் வருகிறது. மக்களால் புரிந்து கொள்ளாத போதனைகளுக்குக் கீழ்ப்படிய இயலாது.
நார்த்ம்பிரியர்களின் நம்பிக்கை இறுதியில் தங்கள் நாட்டிற்கு அப்பால் பல நாடுகளுக்கு பரவியது. ஐடனைப் போலவே, மற்றவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் இருக்கும் நிலையிலேயே நாம் அவர்களை சந்திக்கிறோம்.
எளிமையான சொற்களில், சுவிசேஷத்தை எவ்வாறு விளக்குவீர்கள்? இயேசுவை விசுவாசிக்காத மக்கள் நீங்கள் நினைப்பது போல அல்லது நடந்திகொள்ளுவது போல நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதை எவ்வாறு தவிர்க்கலாம் ?
இயேசுவே, நான் புரிந்துகொள்ளக்கூடிய வழிகளில் என்னை அடைந்ததற்கு நன்றி.