“சிலைகளின் மூக்கு ஏன் உடைக்கப்பட்டிருக்கிறது?” புரூக்ளின் அருங்காட்சியகத்தில் எகிப்திய கலையின் கண்காணிப்பாளரான எட்வர்டை பார்வையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.

அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் சாதாரண சேதம் என்று அவை சேதம் அடைந்திருப்பதை குறித்து எட்வர்ட் குறை கூற முடியாது. ஏனெனில், சுவரிலுள்ள இருபரிமாண சித்திரங்களிலும் மூக்கு பகுதியை காணவில்லை. அத்தகைய அழிவு வேண்டுமென்றே இருந்திருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். எதிரிகள் எகிப்தின் தேவர்களைக் கொல்ல வேண்டுமென உத்தேசித்திருந்தனர். இது அவர்களுடன் “உன் மூக்கை பிடுங்கி விட்டேன்” என்ற விளையாட்டை அவர்கள் விளையாடுவது போல் இருக்கிறது. படையெடுத்துவந்த வீரர்கள் அந்த விக்கிரகங்களின் மூக்கை உடைத்தனர் அதனால் அவற்றால் சுவாசிக்க முடியாது என்றெண்ணினர்.

அப்படியா? அவ்வளவுதானா? இது போன்ற தேவர்களை வைத்திருப்பதால் தான் சிக்கலில் இருப்பதை பார்வோன் அறிந்திருக்க வேண்டும். ஆம், அவருக்கு இராணுவமும், முழு தேசத்தின் விசுவாசமும் துணையாக இருந்தது. சோர்வுற்ற அடிமைகளான எபிரேயர்கள் மோசே என்ற பயந்த தப்பியோடியவரின் தலைமையில் இயங்கினர். ஆனால் இஸ்ரயேலுடன் ஜீவனுள்ள தேவன் இருந்தார், பார்வோனின் தெய்வங்கள் பாசாங்கு செய்பவை. பத்து வாதைகளுக்குப் பிறகு, அவர்களின் கற்பனை வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இஸ்ரயேலர் புளிப்பற்ற அப்பத்தை ஒரு வாரத்திற்கு சாப்பிட்ட போது, புளிப்பற்ற அப்பத் திருவிழாவுடன் தங்கள் வெற்றியை கொண்டாடினார்கள். (யாத்திராகமம் 12:17; 13: 7-9). புளிப்பு பாவத்தை அடையாளப்படுத்துகிறது. மேலும் தங்களுடைய மீட்கப்பட்ட வாழ்க்கை முற்றிலும் அவருக்கே உரியது என்று அவருடைய மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார்.

நம் பிதா விக்கிரகங்களிடம் , “உங்கள் மூக்கை பிடுங்கி விட்டேன்” என்றும் அவருடைய பிள்ளைகளிடம் “உங்கள் வாழ்வு கிடைத்தது” என்றும் கூறுகிறார். உங்களுக்கு சுவாசத்தை கொடுக்கும் தேவனை சேவியுங்கள், அவருடைய அன்பான கரங்களில் இளைப்பாருங்கள்.