என் பேரக்குழந்தைகள் என் கொல்லைப்புறத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தார்கள். விளையாடிக்கொண்டிருந்தார்களா? இல்லை, களைகளை பிடுங்கிக்கொண்டிருந்தார்கள். “வேரோடு அவற்றைப் பிடுங்குகிறேன்” என்று இளைய குழந்தை கூறி எனக்கு மிகப்பெரிய பரிசைக் காட்டினாள். அந்த நாளில் நாங்கள் கடினமாக முயற்சித்து களைகளை சமாளிக்கும் போது அவளுடைய மகிழ்ச்சியானது, களைவேர்களை பிடுங்குவதை – ஒவ்வொரு தொல்லைதரும் அச்சுறுத்தலையும் நீக்குவதை நாங்கள் எவ்வளவு ரசிக்கிறோம் என்பதாகும். எனினும், சந்தோஷங்களுக்கு முன்பு அவைகளை செய்ய முடிவெடுக்கும் தேர்ந்தெடுப்பு வந்தது.
 
குறிப்பிட்ட நோக்கத்துடன் களையெடுப்பது தனிப்பட்ட பாவத்தை அகற்றுவதற்கான முதல் படியாகும். தாவீது இவ்வாறு ஜெபித்தார்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்… வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து” (சங்கீதம் 139: 23-24).

என்ன ஒரு ஞானமான அணுகுமுறை, நம்முடைய பாவத்தை நமக்குக் வெளிப்படுத்திக்காண்பிக்கும்படி தேவனிடம் கேட்டு அதைப் பின்பற்றுவது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்தவர். “கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்”. சங்கீதக்காரன் எழுதுகிறார், “என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (வச. 1-2).

“இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும் எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது (வச. 6). பாவம் வேரூன்றுவதற்கு முன்பே, தேவன் ஆபத்தை நமக்கு முன்னமே எச்சரிக்க முடியும். அவர் நம்மை உள்ளும் புறமுமாக அறிவார். ஆகவே, ஒரு ரகசியமான பாவமனப்பான்மை நம்மில் வேரூன்ற முயற்சிக்கும்போது, ​​அவர் அதை முதலில் அறிந்து, சுட்டிக்காட்டுகிறார்.

“உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?”, தாவீது எழுதுகிறார். “உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” (வச. 7). நம்முடைய இரட்சகரை உயர்ந்த ஒழுக்க மேன்மையுடன் நெருக்கமாக பின்பற்றுவோம்.