என் தேவதை நடனத்தை பாருங்கள் பாட்டி! என்று என் மூன்று வயது பேத்தி மகிழ்ச்சியுடன் அழைத்தாள். முகத்தில் ஒரு பெரிய சிரிப்புடன் எங்கள் அறையின் முற்றத்தை சுற்றி அவள் ஓடினாள். அவளுடைய “நடனம்” புன்னகையைக் கொண்டு வந்தது; மற்றும் “அவள் நடனமாடவில்லை, ஓடுகிறாள்” என்ற அவளுடைய பெரிய சகோதரனுடைய கடினமான வார்த்தைகள், குடும்பத்துடன் விடுமுறையில் இருப்பதில் அவள் கொண்டிருந்த மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை.
முதல் குருத்தோலை ஞாயிறு என்பது உயர்வு மற்றும் தாழ்வின் நாள். இயேசு கழுதை மீதேறி எருசலேமுக்குச் சென்றபோது திரளான ஜனங்கள்: “கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” (மத்தேயு 21: 9) என்று உற்சாகமாக ஆர்ப்பரித்தார்கள். ஆயினும் கூட்டத்தில் இருந்த பலரும் மேசியா அவர்களை ரோமர்களிடமிருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அதே வாரத்தில் அவர்கள் செய்த பாவங்களுக்காக மரிக்கவிருக்கும் இரட்சகரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அந்த நாளின் பிற்பகுதியில் இயேசுவின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தி பிரதான ஆசாரியர்கள் கோபத்திலிருந்தபோதிலும் அத்தேவாலயத்திலிருந்த குழந்தைகள் “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என ஆர்ப்பரித்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் (வச.15). ஒருவேளை முற்றத்தை சுற்றி ஓடும்போது குதித்து பனை ஓலைகளை அசைக்கலாம். அவர்களால் அவரை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை, இயேசு கோபமாக இருந்த தலைவர்களிடம், “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் (உம்முடைய) துதி உண்டாகும்படி செய்தீர்” (வச. 16) என்றார். அவர்கள் இரட்சகருடைய பிரசன்னத்தில் இருந்தார்கள்.
அவர் யார் என்பதற்காக அவரைக் காணவும் இயேசு நம்மை அழைக்கிறார். சந்தோஷத்தில் நிரம்பி வழியும் குழந்தையைப்போல நாமும் செயல்படும்போது நிச்சயமாக அவர் பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்போம்.
எவ்வாறு அன்றாட கவனச்சிதறல்களும் மற்றவர்களின் அதிருப்தியும் உங்கள் கவனத்தை தேவனிடமிருந்து விலக்குகிறது? இயேசுவின் மீது உங்கள் கண்களை வைத்திருக்க எது உங்களுக்கு உதவும்?
அன்புள்ள தேவனே, எனக்காக நீர் செய்த எல்லாவற்றிக்காகவும் நன்றி! நான் சந்தோஷத்தை கண்டடைவதற்காக நீர் அனுபவித்த மாபெரும் காரியங்கள் என்னை வியப்படையச் செய்கிறது. என் கவனத்தை உம்மிடம் உறுதியாக வைத்திருக்க எனக்கு உதவும்.