நீங்கள் நீண்ட காலம் வாழ விரும்பினால் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்! இதய நோய் அபாயம் உள்ள நடுத்தர வயது ஆண் நிர்வாகிகள் ஒவ்வொருவரை பற்றிய ஆய்வுக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பின்லாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் பங்கேற்பாளர்களைப் பின்தொடர்ந்தனர். விஞ்ஞானிகள் தங்கள் மூல கண்டுபிடிப்புகளில் தாங்கள் தேடாத ஒன்றைக் கண்டறிந்தனர்: விடுமுறைக்கு நேரம் ஒதுக்கியவர்களில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது.

வேலை என்பது வாழ்க்கையின் மிகவும் அவசியமான பகுதியாகும் – ஆதியாகமம் 3-ல் அவருடனான நம் உறவு முறிந்து போவதற்கு முன்பே தேவன் நமக்கு நியமித்த ஒரு பகுதி. தேவனின் மகிமைக்காக வேலை செய்யாதவர்கள் அனுபவிக்கும் வேலையின் அர்த்தமற்ற தன்மையைப் பற்றி சாலமோன் எழுதுகிறார். அதனை  “ஆர்வத்துடன் பாடுபடுவது” மற்றும் “அலுப்புள்ளது, அவைகள் வருத்தமுள்ளது” என்று அடையாளப்படுத்துகிறார் (பிரசங்கி 2: 22-23). அவர்கள் சுறுசுறுப்பாக செயல்படாவிட்டாலும் கூட அவர்களின் “மனதுக்கு இளைப்பாறுதலில்லை” என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் இன்னும் செய்து முடிக்க வேண்டியவைகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள் (வச. 23).
 
நாமும் சில சமயங்களில், நாம் “காற்றைத் துரத்துகிறோம்” என்பதைப்போல உணரலாம் (வச. 17). மேலும் நாம் நம் வேலையை “முடிக்க” முடியாமல் விரக்தியடைகிறோம். ஆனால் தேவன் நம் உழைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளும்போது – ​​நம்முடைய நோக்கம் – நாம் கடினமாக உழைத்து, ஓய்வெடுக்கவும் நேரம் எடுத்துக்கொள்ளலாம். அவர் நமக்கு அனைத்தையும் தருவதால், அவர் நம் தேவைகளை சந்திப்பவராக இருப்பதை நாம் நம்பலாம். “அவர் இல்லாமல் யாரால் உண்ணமுடியும் அல்லது இன்பம் காண முடியும்?” என்பதை சாலமோன் ஒப்புக்கொள்கிறார் (வச. 25). ஒருவேளை அந்த சத்தியத்தை நமக்கு நினைவூட்டுவதன் மூலம் நாம் அவருக்காக உத்தமமாய் பணியாற்றலாம் (கொலோசெயர் 3:23). மேலும் ஓய்வு நேரங்களுக்கு நம்மை நாம் அனுமதிக்கலாம்.