வட அமெரிக்காவின் கடுமையான சோனோரன் பாலைவனத்தின் நள்ளிரவு நேரங்களில் அங்கு, ஒரு உயர் தொனியில், மங்கலான அலறலை ஒருவரால் கேட்க முடியும். ஆனால் ஒலியின் மூலத்தை நீங்கள் சந்தேகிக்க மாட்டீர்கள். – சிறிய மற்றும் வலிமைமிக்க வெட்டுக்கிளி சுண்டெலி, நிலவொளியில் அதன் எல்லையை வரையறுக்க அலறும்.
இந்த தனித்துவமான கொறித்துண்ணி (“ஓநாய் சுண்டெலி” என அழைக்கப்படுகிறது) மாமிச உண்ணியாகும். சொல்லபோனால், சிலர் மோத பயப்படும் தேள் போன்ற உயிரினங்களை இது வேட்டையாடுகிறது. ஆனால் ஓநாய் சுண்டெலி இந்த குறிப்பிட்ட யுத்தத்திற்கு தனித்துவமாக பழக்குவிக்கப்பட்டுள்ளது. இது தேள் விஷத்திற்கு எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அந்த விஷத்தை வலி நிவாரணியாக மாற்றவும் முடியும்!
இந்த விழிப்புணர்வுடைய சிறிய சுண்டெலியானது தப்பிப்பிழைப்பதற்கும், அதன் கடுமையான சூழலில் செழித்து வளருவதற்கும் உருவாக்கப்பட்ட அதன் தனித்தன்மைமையில் ஊக்கப்படுத்தும் ஏதோ ஒன்று உள்ளது. பவுல் எபேசியர் 2: 10 ல் விளக்குவது போல, அந்த வகையான அற்புதமான கைவினைத்திறன் தேவனின் ஜனங்களுக்கான அவருடைய திட்டத்தின் பண்புகளை விளக்குகிறது. நாம் ஒவ்வொருவரும் இயேசுவில் தேவனுடைய கரத்தின் கிரியைகளாக அவருடைய ராஜ்யத்திற்கு பங்களிக்க தனித்துவமாக பழக்குவிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். தேவன் உங்களுக்கு எப்படி பரிசளித்திருந்தாலும்சரி, கொடுப்பதற்கு உங்களிடம் அதிகம் உள்ளது. நீங்கள் யாராக இருக்கும்படி தேவன் உங்களை உண்டாக்கினாரோ, அதை நம்பிக்கையுடன் நாம் ஏற்றுக்கொள்ளும்போது, அவரிலுள்ள ஜீவனின் நம்பிக்கை மற்றும் சந்தோஷத்திற்கு உயிருள்ள சாட்சிகளாய் இருப்பீர்கள்.
உங்கள் சொந்த வாழ்க்கையில் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் காரியங்களை நீங்கள் எதிர்கொள்ளும்போது தைரியம் கொள்ளுங்கள். நீங்கள் சிறுமையாக உணரலாம். ஆனால் ஆவியானவரின் பரிசு மற்றும் பெலப்படுத்துதல் மூலம் வல்லமையான காரியங்களைச் செய்ய தேவன் உங்களைப் பயன்படுத்த முடியும்.
உங்களை தேவனுடைய கரத்தின் அற்புதமான கிரியையாகப் பார்ப்பது எளிதானதா அல்லது கடினமானதா? ஏன்? உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதிகளில் இந்த உண்மையை நினைவில் வைத்திருப்பது உங்களுக்கு புதிய நம்பிக்கையையும் தைரியத்தையும் தருகிறது?
தேவனே, மகிழ்ச்சியுடனும் நோக்கத்துடனும் வாழ என்னை படைத்த வியத்தகு வழிக்காக உமக்கு நன்றி. உம்மில் நான் யார் என்ற உண்மையை நம்பவும், தைரியத்தை கண்டடையவும் எனக்கு உதவும்.