எனது வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் உள்ள ஒரு புற்றுநோய் மையத்தில் எனது அம்மாவின் நேரடி பராமரிப்பாளராக சேவை செய்யும்போது ​எங்களுக்காக ஜெபிக்கும்படி மக்களிடம் கேட்டேன். மாதங்கள் செல்லச் செல்ல தனிமைப்படுத்தல் மற்றும் தனிமை உணர்வு என் வலிமையைக் குறைத்தன. நான் என் உடல், மன மற்றும் உணர்ச்சி சோர்வுக்கு ஆளானால் நான் எப்படி என் அம்மாவை கவனித்துக்கொள்ள முடியும்?

ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் எதிர்பாராத பராமரிப்புத் தொகுப்பை எனக்கு அனுப்பினார். என் நண்பர் கைப்பின்னலாலான ஒரு ஊதா நிற ஜெப சால்வையை வைத்திருந்தார், தினமும் எங்களுக்காக மக்கள் ஜெபிக்கிறார்கள் என்பதன் அன்பான நினைவூட்டல் அது. அந்த மென்மையான நூலை என் தோள்களில் சுற்றிக்கொண்ட போதெல்லாம் தேவன் தன் ஜனத்தின் ஜெபங்களால் என்னைக் கட்டிப்பிடிப்பதை உணர்ந்தேன். பல வருடங்கள் கழித்தும் அவர் அந்த ஊதா நிற சால்வையை எனக்கு ஆறுதலளிக்கவும், எனது தீர்மானத்தை பலப்படுத்தவும் பயன்படுத்துகிறார்.

மற்றவர்களுக்காக ஜெபிப்பதின் – முக்கியத்துவத்தையும், அதன் ஆவி-புத்துணர்ச்சியூட்டும் வல்லமையையும் அப்போஸ்தலர் பவுல் உறுதிப்படுத்தினார். தனது பிரயாணங்களின்போது ஜெபமுள்ள ஆதரவையும், ஊக்கத்தையும் கோருவதன் மூலம் மற்றவர்களுக்காக ஜெபிப்பவர்கள் எவ்வாறு ஊழியத்தில் பங்காளிகளாக மாறுகிறார்கள் என்பதை பவுல் விளங்கப்பண்ணினார் (ரோமர் 15:30). குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைப்பது என்பது அப்போஸ்தலன் சக விசுவாசிகளின் ஆதரவை சார்ந்த்திருப்பதைக் காட்டியது மட்டுமல்லாமல் தேவன் ஜெபத்திற்கு வல்லமையான முறையில் பதிலளிக்கிறார் என்ற நம்பிக்கையையும் காட்டுகிறது (வச. 31-33).

தனிமையாக உணரும் நாட்களை நாம் அனைவரும் அனுபவிப்போம். ஆனால், நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பது போல நமக்காக மற்றவர்களிடம் ஜெபிக்க கேட்பது எப்படி என்பதை பவுல் நமக்குக் காட்டுகிறார். தேவனுடைய ஜனங்களின் பரிந்துபேசும் ஜெபங்களினால் நாம் மூடப்பட்டிருக்கும் போது, ​​வாழ்க்கை நம்மை எங்கு அழைத்துச் சென்றாலும் தேவனுடைய பலத்தையும், ஆறுதலையும் நம்மால் அனுபவிக்க முடியும்.