அழகான நாளை அனுபவிக்க விரும்பிய நான், நடந்துவிட்டு வரலாம் என வெளியே புறப்பட்டேன் விரைவில் ஒரு புதிய அண்டை வீட்டாரை சந்தித்தேன். அவர் என்னை இடைநிறுத்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்: “என் பெயர் ஆதியாகமம் எனக்கு ஆறரை வயது” என்றான்.
“ஆதியாகமம் ஒரு உயரிய பெயர்! இது வேதாகமத்தில் உள்ள ஒரு புத்தகம்” என்று நான் பதிலளித்தேன்.
“வேதாகமம் என்றால் என்ன?” என்று அவன் கேட்டான்.
“அவர் எப்படி உலகத்தையும் மக்களையும் எவ்வாறு சிருஷ்டித்தார் மற்றும் அவர் நம்மை எப்படி நேசிக்கிறார் என்பவற்றைப் பற்றிய தேவனின் கதைப்புத்தகம் இது.”
அவனது வினோதமான மறு மொழி என்னைப் புன்னகைக்க செய்தது: “அவர் ஏன் உலகத்தையும் மக்களையும் கார்களையும் வீடுகளையும் உருவாக்கினார்? என் படம் அவருடைய புத்தகத்தில் உள்ளதா?”
என் புதிய நண்பர் ஆதியாகமம் அல்லது நம் அனைவரின் உண்மையான நிழற்படம் வேதாகமத்தில் இல்லையென்றாலும் தேவனுடைய கதைப்புத்தகத்தில் நாம் பெரும்பங்காவோம். ஆதியாகமம் 1-ல், “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்” (வ. 27) என்பதை கண்டோம். தேவன் அவர்களுடன் தோட்டத்தில் உலாவினார், பின்னர் தாங்களே தங்கள் சொந்த தேவனாக இருக்க வேண்டும் என்ற சோதனைக்குட்படுவதை குறித்து எச்சரித்தார் (அதி. 3). அவருடைய குமாரனாகிய இயேசு, அன்புள்ளவராய், எப்படி மீண்டும் நம்முடன் உலாவ வந்தார் மற்றும் நம்முடைய பாவமன்னிப்பிற்கான மற்றும் அவருடைய படைப்பின் மீட்பிற்கான திட்டத்தை எவ்வாறு கொண்டு வந்து செயல்படுத்தினார் என்பதைப் பற்றி தேவன் பின்னர் அவருடைய புத்தகத்தில் கூறியுள்ளார்.
நாம் வேதத்தைப் பார்க்கும்போது, நாம் அவரை அறிந்து கொள்ளவும், அவருடன் பேசவும், நம்முடைய கேள்விகளை அவரிடம் கேட்கவும் நம்முடைய சிருஷ்டிகர் விரும்புகிறார் என்பதை அறிகிறோம். நாம் நினைப்பதை விடவும் அவர் நம்மீது அதீத அக்கறை கொண்டுள்ளார்.
தேவனுடைய கதையில் உங்களை நீங்கள் எங்கு காண்கிறீர்கள்? எந்தெந்த வகையில் அவருடைய ஐக்கியத்தை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்?
அன்புள்ள தேவனே, உம்முடைய கதையின் ஒருபகுதியாக என்னை உருவாக்கியத்தற்காக உமக்கு நன்றி. நீர் என்னை எப்படி அன்புகூருகிறீரோ அதே போல் நான் உம்மையும், மற்றவர்களையும் அன்புகூர உதவி செய்யும்.
வேதாகமத்தை புரிந்து கொள்ளுதல் வாசிக்கவும். சுவிசேஷங்கள் DiscoverySeries.org/Q0414