கல்லூரியில் படிக்கும் போது, வெனிசுலாவில் கோடைகாலத்தின் ஒரு நல்ல பகுதியை நான் கழித்தேன். உணவு வியக்க வைப்பதாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சிகரமானவர்கள், வானிலை மற்றும் விருந்தோம்பல் அழகாக இருந்தது. இருப்பினும், முதல் நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள், நேர நிர்வாகத்தை குறித்த எனது கருத்துக்கள் எனது புதிய நண்பர்களால் பகிரப்படவில்லை என்பதை நான் உணர்ந்தேன். நாங்கள் மதியம் மதிய உணவு சாப்பிட திட்டமிட்டிருந்தால், அது மதியம் 12 முதல் 1 மணி இடையில் எப்பொழுதாவது இருக்கலாம். கூட்டங்கள் அல்லது பயணங்களுக்கும் இப்படியே: காலவரையறைகள் குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் தோராயமாக இருந்தன. “சரியான நேரத்தில்” என்ற எனது யோசனை நான் உணர்ந்ததை விட மிக அதிகமாக கலாச்சார ரீதியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிந்தேன்.
பொதுவாக நாம் எப்போதும் கவனிக்காமலேயே, நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள கலாச்சார விழுமியங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளோம். பவுல் இந்த கலாச்சார சக்தியை “பிரபஞ்சம்” என்று அழைக்கிறார் (ரோம. 12:2). இங்கே, “பிரபஞ்சம்” என்பது இயற்பியல் பிரபஞ்சத்தை குறிக்காது, மாறாக நம் இருப்பைப் பரப்பும் சிந்தனை வழிகளைக் குறிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் நாம் வாழ்வதால் கேள்விக்குறியாகாத அனுமானங்களையும் வழிகாட்டும் கொள்கைகளையும் குறிக்கிறது.
“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” என்று விழிப்புடன் இருக்குமாறு பவுல் எச்சரிக்கிறார். மாறாக, “ உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (வச. 2). சிந்தனை வழிகளை செயலற்ற முறையில் எடுத்துக்கொள்வதற்கும், நம்மைச் சூழ்ந்திருப்பதாக நம்புவதற்கும் பதிலாக, தேவனின் சிந்தனை வழியை தீவிரமாகப் பின்தொடரவும், அவருடைய “நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை” எவ்வாறு புரிந்துகொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளவும் அழைக்கப்படுகிறோம் (வச. 2). மற்றவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பதை விட, தேவனுக்கு செவிசாய்ப்போம்.
உங்களைச் சுற்றியுள்ள மதிப்புகள் மற்றும் அனுமானங்களை எவ்வாறு விவரிப்பீர்கள்? நீங்கள் உலகின் வழிகளில் ஒத்துப்போகாமல் இருந்து, அதற்கு பதிலாக இயேசுவின் வழிகளைப் பின்பற்றினால் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?
தேவனே, எனது அனுமானங்களையும் மதிப்புகளையும் நான் பெரும்பாலும் அடையாளம் காணவில்லை. உமது சத்தியத்தையும் உமது மனதையும் எல்லாவற்றிலும் நான் வாழ எனக்கு உதவும்.