மாபெரும் சூறாவளி என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது. வளிமண்டல அழுத்தம் குறைந்து குளிர்கால புயல் விரைவாக தீவிரமடையும்போது இப்படித்தான் நடக்கும். இரவு நேரத்தில் காற்று வீசும். தூசி நிறைந்த சூழ்நிலை விமான நிலையத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட பார்க்க இயலாததாக ஆக்கிவிட்டது. ஆனால் உங்கள் மகள் உங்கள் வீட்டிற்கு விமானத்தில் பயணித்து வரும் போது, நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறீர்கள். நீங்கள் கூடுதல் உடைகள் மற்றும் தண்ணீரை எடுத்து செல்வீர்கள். (நீங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டால்). மிக மெதுவாக வாகனம் ஓட்டு வீர்கள். நிறுத்தாமல் பிரார்த்தனையும் செய்வீர்கள் இறுதியாக, உங்கள் முகப்பு விளக்குகளை நம்புவீர்கள். சில நேரங்களில் நீங்கள் கிட்டத்தட்ட சாத்தியமற்றதை அடையமுடியும்.
அவருடைய மரணம் சம்பந்தப்பட்ட ஒரு புயலை இயேசு தன் ஞானத்தால் முன்னறிவித்தார் (1 யோவா. 12:31-33). அது தம்மை பின்பற்றுபவர்களுக்கு உண்மையுள்ளவர்கவும், சேவை செய்பவர்களாகவும் இருக்க ஊக்குவிக்கிறது. இப்பொழுது இருட்டாக போகிறது, பார்க்க கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கிறது.. ஆகவே இயேசு அவர்களை பார்த்து “ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்” என்று சொன்னார் (வச. 36). அவர்கள் முன்னோக்கிச் சென்று உண்மையாக இருக்க ஒரே வழி அதுதான்.
இயேசு இன்னும் சிறிது காலம் மட்டுமே அவர்களுடன் இருப்பார். ஆனால் விசுவாசிகளுக்கு தேவ ஆவியானவர் வழியை ஒளிர செய்வதற்கான நிலையான வழிகாட்டியாக இருக்கிறார். நாமும் கிட்டத்தட்ட பார்க்க சாத்தியமற்ற காலங்களை எதிர்கொள்வோம். ஆனால் ஒளியினிடத்தில் விசுவாசமாயிருப்பதின் மூலம் நாம் முன்னோக்கி செல்லலாம்.
நீங்கள் சமீபத்தில் என்ன இருண்ட பருவத்தில் இருந்தீர்கள்?
வெளிச்சமாகிய இயேசு, நீங்கள் முன்னோக்கிச் செல்வதற்கு எப்படி உதவினார்?
இயேசுவே, எங்கள் இருளில் வெளிச்சமாக இருப்பதற்கு நன்றி. நாங்கள் நம்பவும் தொடர்ந்து முன்னேறவும் எங்களுக்கு உதவும்.