உள்ளூர் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு நிகழ்வுகளில், டெட் அரங்கத்தில் மிக அதிகமாக பேசுபவராகவும் ஆதிக்கம் நிறைந்த நபராகவும் இருந்தார். ஒரு சீர்குலைக்க கூடிய நிலை அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு, அவர் 6 அடி 6 அங்குலம் உயரமும் 130 கிலோவுக்கு அதிக எடையும் கொண்டவர். கூட்டத்தை தூண்டும் சேன்ட்சாட் பள்ளி நிகழ்வுகள் பழம் பெருமை வாய்ந்தவை.
ஆனால் டெட் தனது சமூகத்தில் புகழ் பெற்றது விளையாட்டில் உற்சாகம் ஊட்டுபவராக இருந்ததினால் அல்ல. ஒரு இளைஞனாக அனுபவித்த மது அடிமை தனத்தினாலும். தேவன் மீது மற்றும் குடும்பத்தின் மீது அன்புக்காகவும், அவருடைய தாராள மனப்பான்மைக்காகவும், கருணைக்காகவும் அவர் நினைவு கூரப்படுகிறார். 7 மணி நேரம் நடைபெற்ற அடக்க ஆராதனையில், நற்செய்தி மூலம் கிறிஸ்துவின் வல்லமையாலே இருளில் இருந்து மீட்கப்பட்ட ஒரு மனிதனின் துடிப்பான கிறிஸ்துவைப் போன்ற வழிகள் பற்றி சாட்சியம் அளிக்க ஒருவருக்குப் பின் ஒருவராக முன்வந்தனர்.
எபேசியர் 5:8ல் பவுல் விசுவாசிகளுக்கு இவ்வாறு நினைவுபடுத்துகிறார், “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாய் இருந்தீர்கள்.” ஆனால் உடனேயே குறிப்பிட்டது என்னவென்றால், “இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்.” இயேசுவை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவே அழைப்பு. டெட் போன்ற ஒளியின் பிள்ளைகள் இந்த உலகின் இருளில் மூழ்கி இருப்பவர்களுக்கு நிறைய வழங்க வேண்டும். “கனியற்ற அந்தகார கிரியைகள்” தவிர்க்கப்படவேண்டும். (பார்க்க வச. 3-4, 11) நம்முடைய சமூகங்களிலும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு இயேசுவால் பிரகாசிக்கப்பட்டவர்களின் அற்புதமான தனித்துவமான சாட்சி தேவை. (வசனம் 14) என்பது ஒளி இருளில் இருந்து வேறுபட்டது போல எவ்வளவு தனித்துவமானது.
இந்த உலகில் கிறிஸ்துவின் ஒளியை வேண்டுமென்றே பரப்பப் நாம் தயங்குவதற்கான சில காரணங்கள் யாவை? அவருடைய ஒளி தேவைப்படும் உங்களை சுற்றியுள்ள இடங்கள் எங்கே?
பிதாவே வெளிச்சமாக இருப்பதைப் பற்றிய என் செயலற்ற தன்மைக்கு என்னை மன்னியுங்கள். என்னை வழிநடத்தி இந்த உலகில் இருண்ட இடங்களில் என்னை ஒளியாக பயன்படுத்துங்கள்.