ஹாரியட் டப்மேன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க போராட்ட வீரர்களில் ஒருவர். குறிப்பிடத்தக்க தைரியத்தை காட்டி, அமெரிக்காவின் வடக்கில் விடுதலையான நிலப்பரப்புக்குள் கடந்து வந்து அடிமைத்தனத்தில் இருந்து தப்பித்த பின், 300க்கும் மேற்பட்ட அடிமைகளின் விடுதலைக்கு வழிநடத்தினார். தனது சொந்த சுதந்திரத்தை வெறுமனே அனுபவிப்பதில் திருப்தியாக இருந்துவிடவில்லை. நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் அந்நியர்களை சுதந்திரத்திற்கு இட்டுச் செல்ல 19 முறை அடிமை மாநிலங்களுக்குள் நுழைந்தார். சிலசமயங்களில் கனடாவுக்கு நடந்து செல்லும் பாதையில் மக்களை வழிநடத்தினார்.
இத்தகைய துணிச்சலான நடவடிக்கைக்கு டப்மேனைத் தூண்டியது எது? ஆழ்ந்த விசுவாசம் உள்ள அந்த பெண்மணி ஒரு காலத்தில் இதைச் சொன்னார். நான் எப்போதும் தேவனிடம் சொல்வேன், நான் உம்மில் நிலைநிற்க போகிறேன். நீர்தான் என்னை பார்க்க வேண்டும். மக்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றும் போது தேவனின் வழிகாட்டுதலை அவள் சார்ந்து இருப்பது அவளுடைய வெற்றியின் ஒரு தனிச்சிறப்பாகும்.
தேவனிடம் “நிலை நிற்பது” என்றால் என்ன? ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் ஒரு வசனம் உண்மையில் அவருடைய கையை நாம் பற்றிக் கொள்ளும் போது நம்மை பிடிப்பவர் அவர் என்பதை காண நமக்கு உதவக்கூடும். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையை பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” (41:13). ஏசாயா இப்படியாக சொன்ன ஒரு கடவுளை மேற்கோள் காட்டுகிறார்.
ஹாரியட் தேவனை இறுக்கமாக பற்றிக் கொண்டார். தேவன் அவளைப் பார்த்துக்கொண்டார். நீங்கள் என்ன சவால்களை எதிர் கொள்கிறீர்கள்? உங்கள் கையையும் உங்கள் வாழ்க்கையையும் அவர் “பிடித்துக் கொள்வதால்” கடவுளிடம் உறுதியாக இருங்கள். “பயப்படாதிருங்கள்” அவர் உங்களுக்கு உதவுவார்.
இப்போது உங்களின் மிகப்பெரிய சவால் என்ன? நீங்கள் அவரை நம்புகிறீர்கள் என்று தேவனுக்கு தெரியப்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும் அல்லது என்ன சொல்ல முடியும்?
பரலோகத்திலிருக்கிற பிதாவே, நாங்கள் தனியாக செய்ய முயற்சிக்கும் போது வாழ்க்கை கடினமானது. எனவே எனக்கு உங்கள் உதவி தேவை. தயவுசெய்து எனது மிகப்பெரிய சவால்களில் என்னுடன் வந்து நான் தனியாக இல்லை என்பதை நான் அறிய எனக்கு உதவும்.