சொல்லுவதற்கு ஓடுதல்
நவீன கால மாரத்தான் ஓட்டப்பந்தயமானது பூர்வ கால கிரேக்க ராஜ்ஜியத்தில் தூது செய்தி கொண்டு சென்ற ஃபிடிப்பைடஸ்-ன் அடிப்படையாக கொண்டது. புராண வரலாற்றின்படி, கி மு 490-ஆம் வருடம், படையெடுத்து வந்த பெர்சியர்களை எதிர்த்து வென்ற கிரேக்கர்களின் வெற்றியை அறிவிப்பதற்கு மாரத்தானில் இருந்து ஏதென்ஸ் வரை ஃபிடிப்பைடஸ் சுமார் 40 கி மீ ஓடினார். இன்றைய மாரத்தான் போட்டிகள் ஒரு தடகள பொடியாக தனிப்பட்ட திருப்திக்கு ஓடப்படுகிறது. ஆனால் ஃபிடிப்பைடஸ்-க்கு ஒரு பெரிதான நோக்கம் இருந்தது. அவரு எடுத்து வாய்த்த ஒவ்வொரு அடியும் தன தேசத்தினருக்கு சந்தோஷமளிக்கும் நற்செய்தியை தருவதாக இருந்தது .
அதே போல் 500 வருடங்களுக்கு பிறகு, இரு பெண்களும் நற்செய்தியை அறிவிக்க ஓடினார்கள்- வரலாற்றின் மிக முக்கியமான செய்தி. மரியாளும் மகதலேனா மரியாளும் இயேசுவை அடக்கம் பண்ண கல்லறை வெறுமையாக இருந்ததை பார்த்த போது தேவதூதர் ஒருவர் வந்து அவர்களிடம் இயேசுவை பற்றி “சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்” என்று கூறினான். “அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும்” வேகமாக ஓடிச்சென்று சீஷர்களிடம் கூறினார்கள்.
நாமும் அதே ஆனந்த சந்தோஷத்துடன் உயிர்த்தெழுந்த இயேசுவை குறித்து மற்றவர்களிடம் பகிர ஊக்குவிக்கப் படுவோமாக. அதை பகிர நாம் தூரம் ஓட வேண்டும் என்று அவசியம் இல்லை. நம்மருகே வசிக்கும் நண்பர்களிடம் இதை நற்சிதேஹியை பகிர்ந்தாலே போதும் மரணத்தை வென்ற ஆருடன் நாமும் வெற்றியுடன் வாழ மற்றவர்களுடன் பகிர்வோம்.
சிறிய மீன்
சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த ஒரு தம்பதியினருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தங்கள் ஊரிலே வசித்து வந்தார். அநேக முறை இயேசுவின் அன்பைக் குறித்து அவருக்கு பகிர்ந்து வந்தனர். அவரின் இரட்சிப்பையும் குறித்து அவருக்கு அறிவித்து வந்தனர். இப்படிப்பட்ட மிகப் பெரிய உண்மையை உணர்ந்தும் தம் வாழ்க்கையை வேறொரு மதத்தின் நிமித்தம் விசுவாசத்திற்கு தம்மை ஒப்புக்கொடுக்க தயங்கினார். சிறிதளவு அவர் பண ரீதியாகவும் யோசித்தார். தாம் வழிபடும் மதத்தின் ஒரு தலைவராக இருந்தபடியால் பணப்பற்றாக்குறை தயக்கமும் அவர் மத சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் மரியாதை விடும் என்ற பயமும் இருந்தது.
வருத்தத்துடன் அந்த தம்பதியினிரடம் “ஓடுகிற நதியில் கைகளைக் கொண்டு மீன் பிடிப்பவனைப் போல் இருக்கிறேன். சிறிய மீன் ஒன்றை பிடித்து விட்டிட்டேன், ஆனால் பெரிய மீன் ஒன்று போவதைப் பார்க்கிறேன். அந்த பெரிய மீனை பிடிப்பதற்கு இந்த சிறிய மீனை நான் விட வேண்டியதாய் இருக்கிறது.!”
மத்தேயு 19-ல் இருக்கும் அந்த பணக்கார வாலிபனும் இதே போல் ஒரு சூழ்நிலையில் தான் காணப்பட்டான். இயேசுவிடம் வந்து “நித்திய ஜீவனை பெற நான் என்ன செய்ய வேண்டும்?” (வச 16) என்று கேட்க்கும்போது ஆர்வத்துடன் கேட்பது போல் இருந்தாலும் தன ஜீவனை முழுமையாக இயேசுவிடம் ஒப்படைக்க மனதில்லை. அவன் பணத்தில் மாத்திரம் ஐஸ்வர்யாவானாக இருக்கவில்லை, தம் வழிமுறைகளை கடைப்பிடிப்பதில் மிகவும் பெருமை உடையவனாய் இருந்தான்.நித்திய ஜீவனை அடைய வாஞ்சித்தாலும், இயேசுவை வெறுத்து மற்றவைகளை நேசித்தவனாக காணப்பட்டான்.
தாழ்மையுடன் நம் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்து, அவர் நமக்களித்த இலவச இரட்சிப்பை ஏற்றுக்கொண்டால், “என்னை பின்பற்றி வா” என்று அழைக்கிறார்.
தேவனின் கால் சுவடுகள்
“கடவுள் எங்கே வாழ்கிறார் என்று எனக்கு தெரியும்” என்று என் நான்கு வயது பேரன் என் மனைவி கேரியிடம் கூறினான். “அது எங்கே ?” என்று ஆர்வத்துடன் அவள் கேட்டாள். “உங்கள் வீட்டின் அருகில் உள்ள காட்டு வெளியில் ஆவர் வாழ்கிறார்” என்று என் பேரன் கூறினான்.
அவர்கள் இருவரும் உரையாடியதை பற்றி கேரி என்னிடம் கூறி அவனுடைய சிந்தனையை எது தூண்டியது என்று ஆச்சரியப்பட்டாள். “எனக்கு தெரியும்” என்று நான் கூறினேன். “அவன் சென்ற முறை வந்திருந்தபோது நாங்கள் அருகிலுள்ள காட்டு வெளியில் நடந்து சென்றோம். அப்பொழுது அவனிடம், நாம் தேவனை காண முடியாவிட்டாலும் அவர் செய்திருப்பவைகளை நாம் காணலாம்.” “நான் ஏற்படுத்துகிற கால் சுவடுகளை உன்னால் பார்க்க முடிகிறதா?” என்று அந்த நதியின் மணலான பகுதியில் நடந்து செல்லும் போது என் பேரனிடம் கேட்டேன். “இந்த மிருகங்களும் மரங்களும் நதியும் தேவனின் கால் சுவடுகள். அவர் படைத்தவற்றை காணும்போது அவர் இங்கே இருக்கிறார் என்பதை நாம் அறியலாம்.”
104-ஆம் சங்கீதத்தை எழுதியவரும் படைப்பில் தேவன் இருக்கும் ஆதாரங்களை சுட்டிக்காட்டி, ஆச்சரியத்துடன் “ கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது” என்று கூறுகிறார் (வச 24). இங்கே காணப்படும் ஞானத்திற்கான எபிரேய வார்த்தை திறமையான கைவினைத்திறனை விவரிக்க வேதாகமத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையில் தேவனின் கைவேலை அவர் இருப்பதை பறைசாற்றி அவரை துதிக்க விரும்ப செய்கிறது.
சங்கீதம் 104 “என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி” என்ற வார்த்தைகளில் தொடங்கி நிறைவடைகிறது (வச 1, 35). ஒரு குழந்தையின் கையில் இருந்து ஒரு கழுகின் கண் வரை, நம்மைச் சுற்றியுள்ளவைகள் நம் சிருஷ்டிகரின் கலைத்திறனையும் அவருடைய முழுமையான திறமையைப் பற்றியும் பேசுகிறது. அவை எல்லாவற்றையும் இன்று நாம் ஆச்சரியத்துடன் எடுத்துக் கொள்வோம் - அதற்காக அவரைத் துதிப்போம்!
உடைக்க முடியாத விசுவாசம்
தங்களது முதல் பிறந்த மகனை மன இறுக்கம் (ஆட்டிசம்) கொண்டதாக மருத்துவர்கள் கண்டறிந்த பின்னர், மனநலத்தில் ஊனமுற்ற குழந்தையை வாழ்நாள் முழுவதும் பராமரித்து வாழ்க்கையை எதிர்கொள்ளுவதை எண்ணி ஒரு இளம் தம்பதியினர் துக்கமடைந்தனர். தங்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் தங்களின் அன்பிற்கினிய மகனின் எதிர்காலத்திற்காக அனுசரித்துக் கொள்ள எதிர்கொண்ட போராட்டங்களை, உடைக்கப்படாத விசுவாசம் என்ற புத்தகத்தில் அவர் ஒப்புக் கொள்கிறார். எனினும், இந்த வேதனையான செயல்முறையின் மூலம், அவர்களுடைய கோபத்தையும், சந்தேகங்களையும், பயங்களையும் தேவன் கையாள முடியும் என்பதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள். இப்போது, அவர்களின் மகன் வால வயது அடையும்போது, டயான் தனது அனுபவங்களைப் பயன்படுத்தி சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் பெற்றோரை ஊக்குவிக்கிறார். தேவனின் உடைக்க முடியாத வாக்குறுதிகள், வரம்பற்ற வல்லமை மற்றும் அன்பான விசுவாசத்தைப் பற்றி அவள் மற்றவர்களிடம் கூறுகிறார். ஒரு கனவின் மரணம், ஒரு எதிர்பார்ப்பு, வாழ்க்கையின் ஒரு வழி அல்லது ஒரு பருவத்தை நாம் அனுபவிக்கும் போது அதைக்குறித்து துக்கப்படுவதற்கு தேவன் நமக்கு அனுமதி அளிக்கிறார் என்று டயான் மக்களுக்கு ஊக்கமளிக்கிறார்.
ஏசாயா 26-ல், தேவனுடைய மக்கள் அவரை என்றென்றைக்கும் நம்பலாம், “கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” என்று தீர்க்கதரிசி அறிவிக்கிறார் (வச 4). ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அமைதியுடன் நம்மைத் நிலைநிறுத்த முடியும் (வச 12). அவரது மாறாத தன்மையை மையமாகக் கொண்டு, சிக்கலான காலங்களில் அவரை நோக்கி கூக்குரலிடுவது நம் நம்பிக்கையை புதுப்பிக்கிறது (வச 15).
எந்தவொரு இழப்பு, ஏமாற்றம் அல்லது கடினமான சூழ்நிலையை நாம் எதிர்கொள்ளும் போது, அதைப் பற்றி அவரிடம் நாம் உண்மையாக இருக்க தேவன் நம்மை அழைக்கிறார். நம்முடைய மாறிவரும் உணர்ச்சிகளையும் கேள்விகளையும் அவரால் கையாள முடியும். அவர் நம்முடன் இருந்து நீடித்த நம்பிக்கையுடன் நம் ஆவிகளைப் புதுப்பிக்கிறார். நம் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து வருவதைப் போல நாம் உணரும்போது கூட, தேவனால் நம் விசுவாசத்தை உடைக்க முடியாததாக மாற்ற முடியும்.