வாஷிங்டன் டி சி நகரில் உள்ள ஆபிரிக்க-அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் அடிமைத்தனத்தையும் அதன் பின்விளைவுகளையும் கண்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கும்போது அங்குள்ள ஒரு அமைதியான அறையில் ஒளி வரக்கூடிய வெண்கல கண்ணாடிகளால் ஆன சுவர்களில் தண்ணீர் மேலிருந்து மழைபோல ஊற்றி ஒரு சிறிய குளம் போன்று இருக்கும்.
அந்த அறையில் முனைவர் மார்ட்டின் லூத்தர் கிங் கூறிய சொற்கள் எழுதப்பட்டிருந்தன “நீதி மழையை போல பெய்யும் வரை, நேர்மை ஒரு வல்லமையான ஓடையை போல புரண்டு ஓடும் வரை நாம் போராடுவோம் என்று நான் தீர்மானித்திருக்கிறேன்”. இந்த வல்லமையுள்ள வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் ஆமோஸின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
மத வழிபாடுகளிலும்,பண்டிகைகள் கொண்டாடுவதிலும், பலிகள் செலுத்துவதிலும் அதிகம் நாட்டம் கொண்டு ஆனால் உள்ளத்தில் தேவனை விட்டு வெகு தூரத்தில் இருந்த மக்களின் மத்தியில் தான் ஆமோஸ் தீர்க்கதரிசியாக வாழ்ந்து வந்தார். அவர்களுடைய செயல்கள் தேவனுடைய கட்டளைகளையும், தேவையுள்ளவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் ஒதுக்கினதால் தேவன் அவர்கள் செயல்களை நிராகரித்தார்.
அனைத்து மக்களின் நலனுக்காக உண்மையான அக்கறையை தம் மக்கள் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ஆமோஸ் தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். இப்பேற்பட்ட வாழ்வுமுறை மற்ற உயிரை வலிமையாக்கும் நதியாக இருக்கும்.
தேவனில் இணைந்து இருக்கிறோம் என்பதற்கு சான்றாக நம்மை சுற்றி இருப்பவர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பது வெளிப்படுத்தும் என்று இயேசு கற்றுக்கொடுக்கிறார் (மத் 22:37-39). தேவனை நேசிக்க நாம் முற்படும்போது அது நீதியை பொக்கிஷமாக கருதும் இருதயங்களில் இருந்து வருவதாக.
மற்றவர்களிடம் நீதியை பிறப்பிக்கும்படி தேவனிடம் எப்படி அன்பு கூறலாம் ? தேவையுள்ளவர்களுக்கு தாராளமாய் கொடுத்து வாழும் எடுத்துக்காட்டுகள் உங்களை உற்சாகப்படுத்த ஏதேனும் இருக்கின்றனவா?
பரலோக பிதாவே, உம்முடைய அளவற்ற அன்பிற்கும் நீதிக்கும் நன்றி. உம பலமுள்ள குணமாக்கும் சேவையில் என்னையும் இணைத்துக்கொள்ளும்.