ஆப்பிரிக்காவின் கானாவில் உள்ள சிறிய வேதாகம பள்ளி ஒன்று மிகவும் சாதாரணமான ஒரு சிறிய கட்டிடத்தில் மிகவும் குறைந்த மாணவர்களுடன் இயங்கி வந்தது. இருப்பினும் பாப் ஹேய்ஸ் அந்த மாணவர்களுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார்.அந்த மாணவர்கள் தயங்கினாலும் அவர்களுக்கு தலைமைத்துவ பணிகளும் பிரசங்கித்து கற்றுத்தரும் பணிகளையும் ஆர்களிடத்தில் ஒப்புவித்து ஊக்கப்படுத்தினார். பாப் இறந்து பல வருடங்களுக்கு பிறகு கானா முழுவதும் ஆங்காங்கே டஜன் கணக்குகளில் திருச்சபைகளும் பள்ளிக்கூடங்களும் இன்னும் கூடுதலாக இரண்டு வேதாகம நிறுவனங்களும் எழும்பின- அனைத்தும் அந்த சிறிய வேதாகம பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் துவங்கியவை.
அர்தசஷ்டா ராஜா (கி மு 465 -424) அரசாண்ட சமயத்தில் எழுத்தாளரான எஸ்ரா நாடுகடத்தப்பட்ட யூதர்களை மறுபடியும் எருசலேமுக்கு திரும்பி செல்ல ஒன்றிணைத்தார். தேவாலயத்தில் ஆசிரியர்களாக பணியாற்ற லேவியர்களை தேடினார் ஆனால் அங்கு ஒருவரும் காணப்படவில்லை (எஸ்ரா 8:15). உடனடியாக அங்கிருந்த தலைவர்களை வரவழைத்து தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை அழைத்துவரும்படி அவர்களை நியமித்து (வச 17) அவர்களை உபவாசத்திலும் ஜெபத்திலும் வழிநடத்தினார் (வச 21)
எஸ்ரா என்பதற்கு “உதவியாளன்” என்று அர்த்தம்- நல்ல தலைமைத்துவத்தில் இருக்கும் ஒரு குணநலன் அது. எஸ்ராவின் ஜெபத்துடன் கூடிய வழிநடத்துதலினால் அவரும் அவரோடு இருந்தவர்களும் எருசலேமை ஆவிக்குரிய விழிப்புணர்வுக்குள் வழி நடத்தினார்கள் (எஸ்ரா9-10). புத்தியுள்ள வழி நடத்துதலும் சிறிய அளவு உற்சாகமும் மட்டுமே அவர்களுக்கு தேவைப்பட்டது.
இப்படித்தான் தேவ சபையும் இயங்குகிறது. நம்மை உற்சாகப்படுத்தி கட்டியெழுப்ப உதவிய நல்ல வழிகாட்டிகளை போல நாமும் மற்றவர்களுக்கு செய்ய கற்றுக் கொள்கிறோம். நம் வாழ்நாள் முடிந்த பின்னும் அவை நிலைத்திருக்கும். பயபக்தியோடு தேவனுக்கு செய்யும் வேலை நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.
உங்கள் ஆவிக்குரிய வழிகாட்டி யார்? அப்படி ஒருவர் இல்லை என்றால், யாரிடம் உங்களை வழிபடாத கேட்பீர்கள்? கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்தப்படுவதும் மற்றவர்களை வழி நடத்துவதும் ஏன் முக்கியமாக இருக்கிறது?
தகப்பனே, நான் வழிகாட்டும்படி எனக்கு யாரையாவது காண்பியும்.