கலைத் துறையில் பிரசித்தி பெற்ற இரண்டு நபர்கள் தேவன் தங்களை அழைத்தார் என்று விசுவாசித்து தங்கள் தொழில்களை விட்டு விட்டு இயேசுவுக்கு சேவை செய்ய தங்களை அர்ப்பணித்தார்கள். சீனாவின் லிசு இன மக்களுக்கு சேவை செய்ய இங்கிலாந்தில் நடக்கும் கச்சேரிகளில் பியானோ வாசிப்பதை ஜேம்ஸ் ஓ ஃபிரசர்-ம் (1886-1938), சுவிசேஷகராக கலைத்துறையில் கிடைத்த வாய்ப்பை அமெரிக்கரான ஜட்சன் வான் டெவெண்டேர்-ம் துறந்தனர். பின்னர் மிகவும் பிரபலமான “இயேசுவுக்கே ஒப்புவித்தேன்” என்ற பாமாலையை எழுதினார்.
கலைத் துறையில் இருக்கும் அநேகரை தேவன் அழைத்துக் கொண்டிருக்கும் போது இந்த இரு மனிதர்களும் கீழ்ப்படிந்து ஒன்றை பின்பற்றும்படி மற்ற ஒன்றைக் கைவிட்டார்கள். ஒரு வேளை இயேசு, மாற்கு 10:17-25ல் இருக்கும் வாலிப ஐஸ்வரியவானுக்கு கொடுக்கும் அறிவுரையை பார்த்து இவர்களும் ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம். அந்த பரிமாற்றத்தை பார்த்த பேதுரு “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே!” என்று கூறினார் (வச 8). தேவனை பின்பற்றுகிறவர்களுக்கு நித்தியத்தில் இதைவிட “நூறத்தனையாக”வும் நித்திய ஜீவனும் உண்டு என்று இயேசு உறுதியளிக்கிறார். ஆனால் அவருடைய ஞானத்தின் படி “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள்” (வச 31)
தேவன் நம்மை எங்கே வைத்திருந்தாலும் அனுதினமும் நம் வாழ்வை அவருக்கென்று அர்ப்பணிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். நமது வேலை பார்க்கும் அலுவலகமாக இருந்தாலும் அல்லது வீட்டில் இருந்து வெகு தூரமாக இருந்தாலும் அவருடைய கனிவான அழைப்பிற்கு கீழ்ப்படிந்து நமக்கு தந்த தாலந்துகளையும் வளங்களையும் வைத்து அவரை பின்பற்றும் போது நாம் மற்றவர்களை நேசிக்கவும் அவர்களின் தேவைகளையும் அறியவும் தேவன் நமக்கு உதவுவார்.
தம் வாழ்க்கையை இயேசுவுக்காக அர்ப்பணித்த யாரையாவது உங்களுக்கு தெரியுமா?
அர்ப்பணிக்கும் படி தேவன் உங்களை எப்படி அழைக்கிறார்?
இயேசுவே நீர் மகிமைப்படும்படி உம்மையும் என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் சேவை செய்யும் படி என்னை அர்ப்பணிக்க உதவியருளும்.