19-ஆம் நூற்றாண்டில் நடந்த அரசியல் மற்றும் சமூக எழுச்சியின் காலத்தில் வாழ்ந்த கவிஞரும் நாவலாசிரியருமான விக்டர் ஹியூகோ (1802-1885) அவர் எழுதிய “லே மிசரபிள்ஸ்” (Les Miserables) என்ற புத்தகத்திற்கு பிரசித்தி பெற்றவர். ஒரு நூற்றாண்டு கழித்து இசை தழுவிய படமாக எடுக்கப்பட்டு மிகவும் பிரபலமான திரைப்படமாக கருதப்படுகின்றது. அனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. ஹியூகோ கூறின படி “சொற்களால் விவரிக்க முடியாததை இசை வெளிப்படுத்துகிறது மற்றும் அதை குறித்து சொல்லாமலும் இருக்க முடியாது”.
சங்கீதக்காரர்களும் அதை ஒப்புக்கொள்வார்கள். சங்கேத புத்தகத்தில் உள்ள அணைத்து பாடல்களும் ஜெபங்களும் நம் வாழ்வில் தவிர்க்க முடியடா வலிகளையும் கஷ்டங்களையும் பிரதிபலிக்கின்றது. அதன் வார்த்தைகள் நம்மால் அணுக முடியாத இடங்களுக்குள் சென்று நம்கி ஆறுதல் அளிக்கின்றது. எடுத்துக்காட்டாக சங்கீதம் 6:6ல் தாவீது “என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்” என்றுஅழுகிறார்.

வசனமாகிய சங்கீத பாடல்களில் அத்தகைய ஆழமான நேர்மையை கவர்ந்திருப்பது நம்மை நன்றாக ஊக்குவிப்பதாக இருக்கிறது. நமக்கு உதவும் படியும் ஆறுதல் அளிக்கும்படியும் அவர் ப்ரசன்னத்திற்குள்ளாக அழைக்கும் தேவனிடம் நம் பயன்களை கொண்டு வரும்படி அழைக்கிறது.

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை இசை வெளிப்படுத்தக்கூடும். அந்த உணர்ச்சியை நாம் பாடலாகவோ ஜெபமாகவோ அல்லது அழுகையாகவோ வெளிப்படுத்தும் போது நம்மால் அடைய முடியாத ஆழமான இடங்களில் தேவன் தம் வார்த்தைகளால் நம் இருதயத்தில் சமாதானம் தருகிறார்.