நவீன கால மாரத்தான் ஓட்டப்பந்தயமானது பூர்வ கால கிரேக்க ராஜ்ஜியத்தில் தூது செய்தி கொண்டு சென்ற ஃபிடிப்பைடஸ்-ன் அடிப்படையாக கொண்டது. புராண வரலாற்றின்படி, கி மு 490-ஆம் வருடம், படையெடுத்து வந்த பெர்சியர்களை எதிர்த்து வென்ற கிரேக்கர்களின் வெற்றியை அறிவிப்பதற்கு மாரத்தானில் இருந்து ஏதென்ஸ் வரை ஃபிடிப்பைடஸ் சுமார் 40 கி மீ ஓடினார். இன்றைய மாரத்தான் போட்டிகள் ஒரு தடகள பொடியாக தனிப்பட்ட திருப்திக்கு ஓடப்படுகிறது. ஆனால் ஃபிடிப்பைடஸ்-க்கு ஒரு பெரிதான நோக்கம் இருந்தது. அவரு எடுத்து வாய்த்த ஒவ்வொரு அடியும் தன தேசத்தினருக்கு சந்தோஷமளிக்கும் நற்செய்தியை தருவதாக இருந்தது .
அதே போல் 500 வருடங்களுக்கு பிறகு, இரு பெண்களும் நற்செய்தியை அறிவிக்க ஓடினார்கள்- வரலாற்றின் மிக முக்கியமான செய்தி. மரியாளும் மகதலேனா மரியாளும் இயேசுவை அடக்கம் பண்ண கல்லறை வெறுமையாக இருந்ததை பார்த்த போது தேவதூதர் ஒருவர் வந்து அவர்களிடம் இயேசுவை பற்றி “சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்” என்று கூறினான். “அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும்” வேகமாக ஓடிச்சென்று சீஷர்களிடம் கூறினார்கள்.
நாமும் அதே ஆனந்த சந்தோஷத்துடன் உயிர்த்தெழுந்த இயேசுவை குறித்து மற்றவர்களிடம் பகிர ஊக்குவிக்கப் படுவோமாக. அதை பகிர நாம் தூரம் ஓட வேண்டும் என்று அவசியம் இல்லை. நம்மருகே வசிக்கும் நண்பர்களிடம் இதை நற்சிதேஹியை பகிர்ந்தாலே போதும் மரணத்தை வென்ற ஆருடன் நாமும் வெற்றியுடன் வாழ மற்றவர்களுடன் பகிர்வோம்.
நற்செய்தியான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை உங்களிடம் யார் பகிர்ந்துகொண்டார்? மற்றவர்களிடம் அதை எப்படி பகிர்ந்துக்க கொள்ள முடியும்?
தேவனே மரணத்தை வெற்றி சிறந்ததற்காய் நான் களிகூருகிறேன். என் வாழ்க்கையில் நீ தந்த மக்களிடம் அந்த நற்செய்தியை அறிவிக்கும் படி தந்த பாக்கியத்திற்காக நன்றி.