ஒரு ஆங்கில புத்தகத்தை தழுவி எழுதப்பட்ட ஓஸ்-ன் மாந்திரிகன் என்ற நாடகத்தில் டோரதி, சோலைக்கொள்ளை பொம்மை, தகர மனிதன், கோழையான சிங்கமும் மேற்கின் பொல்லாத சூனியக்காரிக்கு சக்தியளித்த விளக்குமாற்றை கொண்டுவருகிறார்கள். அதற்கு பதிலாக ஓஸ்-ன் மாந்திரிகன் அவர்கள் நால்வருக்கும் அவர்களது ஆழ் மனதின் ஆசைகளை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்து இருந்தான்: டோரதி மீண்டும் வீடு செல்வதற்கு ஒரு சவாரி, சோலைக்கொள்ளை பொம்மைக்கு மூளையும், தகர மனிதனுக்கு இதயமும், கோழையான சிங்கத்திற்கு தைரியமும். ஆனால் அந்த மாந்திரீகனோ அவர்களை தினமும் ஏமாற்றி அடுத்த நாள் வர கூறுவான்.
அவர்கள் அந்த மாந்திரீகனுடன் கெஞ்சிக் கொண்டிருக்கும் போது, டோரோதியின் நாய் டோடோ அங்கிருந்த திரையை இழுத்துவிட, திரைக்கு பின்னால் இருந்து பேசிக்கொண்டிருக்கும் மாந்திரீகன் ஒரு மாந்தரீகனே அல்ல, நெப்ராஸ்க்கா என்ற ஊரில் இருந்து வந்த ஒரு பயந்த அமைதியற்ற மனிதன் என்று தெரிய வருகிறது.
இதன் நூலாசிரியர் ல. பிராங்க் பாம்-க்கு, கடவுளை பற்றி பிரச்சினை இருந்ததால் நம் பிரச்சனைகளை நாம் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிக்க விரும்பினார்.
இதற்கு மாறாக, அப்போஸ்தலனாகிய யோவான் திரையை பின்னிழுத்து திரைக்குப் பின்னால் இருக்கும் அற்புதமானவரை வெளிப்படுத்துகிறார். வார்த்தைகள் உதவவில்லை என்றாலும் யோவான் கூறுவது தெளிவாக உள்ளது : தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், அதை சுற்றி பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருக்கிறது ( வெளிப்படுத்தின விசேஷம் 4:2,6). எப்பேர்ப்பட்ட தொல்லைகள் நம்மை பூமியில் வாதித்தாலும் (அதி 2-3), தன் நகங்களை கடித்து கொண்டு முன்னும் பின்னுமாக தேவன் நடப்பதில்லை. அவருடைய சமாதானத்தை நாம் அனுபவிப்பதற்கு, நம் நன்மைக்காக அவர் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்று நீங்கள் எதற்காக அஞ்சுகிறீர்கள்? உங்களை சூழ்ந்திருக்கும் தொல்லைகளை தேவன் கட்டுப்படுத்துகிறார் என்பது உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது ? நீங்கள் அவரை இன்னும் எவ்வாறு நம்பி அவரிடம் சரணடையலாம்?
தேவனே, எல்லாவற்றிலும் நீர் என்னோடு நடக்கிறீர் என்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உம்முடைய சமாதானத்திற்காக நன்றி.