ஒரு நாள் காலைப் பொழுதில் மலையேறும் போது, அதிக பனியின் நிமித்தம், மேகம் முழுவதும் என்னை சூழ்ந்து கொண்டது. சில மீட்டர்கள் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணி நேரம் போல் நீட்டப்பட்டது. அதினால் எனது மனநிலை மிகவும் தாக்கத்திற்க்குள்ளானது. ஆனால், பின்னர் மதிய வேலையில் கொஞ்சமாக பனி மேகம் கலைந்து என் முன் இருக்கும் கம்பீரமான மலைகள் தெரிந்தது என்னை சுற்றி இருக்கும் சிகரங்களை என்னால் பார்க்க முடிந்தது. இவைகளை கண்டபோது என்னை அறியாமலே என் முகத்தில் சந்தோஷம் மலர்ந்தது. இதைக்குறித்து சிந்திக்கும்போது, சில வேலைகளில் எப்படி வெளிப்படை நிகழ்வுகள் நம் ஆவிக்குரிய பார்வையை பாதிக்கிறது என்று சங்கீதக்காரன் நமக்கு நினைப்பூட்டுவது போல் “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்” என்பதை நினைவில் வைக்கவும் சில வேலைகளில் நம் கண்களை ஏறெடுத்து பார்த்தால் மாத்திரம் போதும்.
தன் உதவி எங்கு இருந்து வருகிறது என்று சங்கீதக்காரன் யோசித்துக்கொண்டிருந்தான். தன்னை சுற்றி இறுக்கும் மலைகளில் உள்ள பலிபீடத்தில் இருந்தா? அல்லது சங்கீதக்காரன் தன் முன் சீயோன் மலையில் வீற்றிருக்கும் தேவாலயத்தைப் பார்த்து வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனிடத்தில் இருந்தா என்று? எப்படி பார்த்தாலும் அவரை தொழுதுக் கொள்ளும்படி நம் கண்களை ஏறெடுத்துப் பார்க்க வேண்டும். எப்பேற்ப்பட்ட சந்தர்பங்கள் வழியாக நாம் கடந்து சென்றாலும், நம் பிரச்சனைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அவையனைத்திற்கும் மேலாக இருக்கும் நம்மை படைத்த நம் மீட்பரை நோக்கி நம் கண்களை ஏறெடுத்து பார்போம். அவரே நம்மை பெயர் சொல்லி அழைக்கும் தேவனாக இருக்கிறார். இன்றும், என்றும் அவரே நம் போக்கையும், வரத்தையும் காப்பார்.
இன்று நீங்கள் கடந்து வரும் சூழ்நிலைகளின் மத்தியிலும் எப்படி தேவனை நோக்கி பார்க்கலாம்? உங்களுக்கு தேவைப்படும் உதவியை நிறைவேற்றும் தேவனிடம் கேட்கும் போது எப்படி உணருவீர்கள்?
அன்பின் தேவனே, வானத்தையும், பூமியையும் படைத்த நீர் என்னை பாதுகாப்பதற்காக நன்றி. என் கண்களை உம்மிடம் ஏறெடுத்து பார்த்து உம்மை அண்டிக்கொள்ளும்படி உதவும்.