இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் தன்னுடைய 50 ஆண்டுகால ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் சார்லஸ் சிமியோன் (1759 -1836) தன் அருகில் வாழ்ந்த போதக நண்பரான ஹென்றி வென்னையும் அவருடைய மகள்களையும் சந்தித்தார். பார்த்து முடித்து செல்லும் போது அவருடைய மகள்கள் இருவரும் சிமியோனின் கடுமையான நடக்கை குறித்தும் சுய உறுதிப்பாடான குணத்தை குறித்தும் தங்கள் தந்தையிடம் குறிப்பிட்டார்கள். அதற்கு பதிலளிக்கும் படி அவருடைய மகள்களிடம் அருகில் இருந்த மரத்தில் இருந்து இன்னும் கனியாகாத பழத்தை ஒன்று பறிக்க சொன்னார். அதை ஏன் அவர் சொன்னார் என்று அவர்கள் இருவரும் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் “ இப்பொழுது இது பச்சையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வெயிலுக்கு பின்னரும் மறைக்க பின்னரும் அது பழமாகும். இதே போல் தான் சிமியோனும்” என்று கூறினார்.
வருட போக்கில் தேவனுடைய உருமாற்றும் கிருபையால் சிமியோன் மென்மையானார். அதற்கு ஒரு காரணம் தினமும் வேதம் வாசித்து ஜெபிப்பதற்கு அவர் அர்ப்பணித்தது. “ இதுதான் அவருக்கு இருக்கும் பெரிய கிருபைக்கும் ஆவிக்குரிய பெலத்திற்கான ரகசியம்” என்று அவருடன் சில மாதங்கள் தங்கி இருந்த நண்பர் அவரை குறித்து சாட்சி கொடுத்தார். எரேமியா தீர்க்கதரிசியை போல விசுவாசத்துடன் தேவ வார்த்தையை கைப்பற்றி வந்தார் சிமியோன். “‘ உம்முடைய வார்த்தைகள் கிடைத்த உடனே அவைகளை உட் கொண்டேன்” (எரேமியா 15:16) என்று எரேமியா கூறுகிறார். தேவனுடைய வார்த்தைகளை உட்கொள்ளுவது அவருக்கு ஆனந்தமும் அவர் இருதயத்துக்கு களிப்புமாக இருந்தது.
நாமும் கூட பச்சையாக புளிக்கும் பழமாக இருக்கலாம் ஆனால் தேவ ஆவியால் அவருடைய வார்த்தையை நாம் அதிகம் அறிந்து கொண்டு நாம் மென்மை பட தேவனை நாம் விசுவாசிக்கலாம்.
வேதம் வாசிப்பது உங்களை எவ்வாறு மாற்றியிருக்கிறது? சில நேரங்களில் ஏன் உங்களால் வேதம் வாசிக்க முடிவதில்லை?
தேவனே உம்முடைய வார்த்தைகள் என்னை போஷித்த என்னை பாவத்தில் இருந்து பாதுகாக்கிறது. அதை தினமும் வாசிக்க எனக்கு உதவும்.