ஒருமுறை ஒரு கிறிஸ்துவ மாநாட்டிற்கு சென்றிருந்தபோது ஒரு பெண் என்னிடம் வந்து “நான் உங்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேன்” என்று கூறினாள். ஆனால் எங்கே என்று தெரியவில்லை. அந்த பெண்ணை இதற்கு முன்பு பார்த்ததாக எனக்கும் ஞாபகமில்லை.
சிறிது நேரத்துக்கு பிறகு என்னிடம் வந்து “ நீ வெள்ளை நிற கார் வைத்திருக்கிறீர்களா?” என்று அந்த அந்த பெண் என்னை கேட்டார். “ஆம் சில வருடங்களுக்கு முன்பு வைத்திருந்தேன்” வைத்து இருந்தேன் என்று கூறினேன்.
அந்தப் பெண் சிரித்துக்கொண்டே” நான் பள்ளிக்கு செல்லும் வழியில் தினமும் அங்கு இருந்த போக்குவரத்து விளக்கண்டையில் (traffic light) உங்களை பார்ப்பேன். நீங்கள் எப்பொழுதும் சந்தோஷத்துடன் கைகளை உயர்த்தி பாடிக் கொண்டு இருப்பீர்கள். நீங்கள் தேவனை துதித்து பாடுகிறீர்கள் என்று எண்ணிக் கொள்வேன். சில கஷ்டமான நாட்களில் அது என்னை உற்சாகப்படுத்தியது” என்று கூறினார்.
நாங்கள் இருவரும் தேவனுக்கு நன்றி செலுத்தி சந்தோஷத்துடன் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
யாரும் நம்மை பார்க்கவில்லை என்று நாம் நினைத்துக் கொண்டாலும் மற்றவர்கள் இயேசுவை பின்பற்றுகிறவர்களை கவனிக்கிறார்கள் என்பதை என்னுடைய புதிய நண்பர் எனக்கு ஊர்ஜிதப் படுத்தினார். முழு மனதுடன் ஆராதிக்கிற வாழ்க்கை முறையை நாம் பின்பற்றும் போது நம் சிருஷ்டிகர் முன் நாம் எங்கேயும் எப்பொழுதும் வரலாம். அவருடைய மாறாத அன்பையும் விசுவாசத்தையும் நினைவுகூர்ந்து அவருடன் ஐக்கியத்தையும் அவருடைய பராமரிப்புக்காகவும் நாம் நன்றி செலுத்தலாம். நம் வாகனங்களில் செல்லும்போது துதிகளை செலுத்தி பொது இடங்களில் ஜெபித்தும் சிறிய அன்பின் காரியங்களால் தேவனுடைய அன்பை பரப்பி மற்றவர்களை தேவனுடைய நாமத்தை துதிக்க உற்சாகப்படுத்தலாம் (வச 4). ஞாயிறு காலை மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல.
எந்த விதங்களில் நாம் மனமகிழ்ச்சியுடன் தேவனை ஆராதிக்கலாம் மற்றவர்கள் அதை பார்த்து நீங்கள் எப்பொழுது ஆராதனை செய்து இருக்கிறீர்கள்?
சர்வ வல்ல தேவனே, மற்றவர்களுக்கு பரவக்கூடிய சந்தோஷத்தினாலும் நன்றியுடனும் வாழ எனக்கு உதவியருளும்.