very indian christmas tamil home page
கிறிஸ்துமஸ் மற்றும் டிசம்பர் 25வது நாள் பற்றிய குழப்பம் தான் என்ன? வரலாற்று ரீதியாக, கி.பி. 336 ஆண்டில்தான் கிறிஸ்துமஸ் (கிறைஸ்ட்ஸ் மாஸ்) முதன்முறையாக கொண்டாடப்பட்டது என்பதற்கு முதல் பதிவு உள்ளது, அது கான்ஸ்டன்டைனின் காலம். ஆரம்பத்தில், கிழக்கத்திய சபைகள் அதை ஜனவரி 6-ல் கொண்டாடின. இப்போதைய தேதியான (டிசம்பர் 25) ரோமானிய சாட்டனாலயாவின் (saturnalia) திருவிழாவிற்கு (டிசம்பர் 17-23) மாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று பெரும்பாலான அறிஞர்கள் நம்புகிறார்கள், இது குளிர்கால சங்கராந்தி தேதி என்பதால்.
அதன் பின்னர், கிறிஸ்தவம் மேற்கு நோக்கி பரவியதால், அது பல உள்ளூர் கலாச்சார நடைமுறைகளை தனக்குள் சேர்த்துக்கொண்டது, அவைகள் கிறிஸ்துமஸ் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறி இருப்பதை இப்போது நாம் ஏற்று கொண்டுள்ளோம். கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் மாலை எரிக்கப்படும் கட்டை, பரிசுகளை வழங்குதல் மற்றும் பல காரியங்கள், ஆண்டுகள் செல்லச் செல்ல சேர்க்கப்பட்டன. பின்னர், ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் இந்த மரபுகளை அவர்களுடன் கொண்டு வந்தனர். அதனால் தான் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம், பனி இல்லாத போதும் –நாம் இன்னமும், குளிர்காலம் மற்றும் கலைமான் பனிபொழிவில் இருப்பதுபோல கற்பனை செய்து வாழ்த்து அட்டைகளை அனுப்புகிறோம்!
இப்போது, இந்தியாவில் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகையில், நம்மிடம் உள்ள இந்த பழக்கவழக்கங்களில் பலவற்றைத் தழுவி “பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியம்” என்று தேவதூதர்கள் பாடிய “சமாதான பிரபுவின்” பிறப்பை நினைவூட்டுவதற்கு, அவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆயினும்கூட, “சமாதான பிரபுவை,” கொண்டாடும் நாம் சண்டையால், போரால் மற்றும் ஒற்றுமை இன்மையால் துண்டாடபடுகிறோம் என்பது முரண்பாடாகத் தெரிகிறது; இது வெறுமனே நாம் வாழும் உலகில் மட்டுமல்ல ஆனால் நம் வீடுகளிலும், குடும்பங்களிலும் மற்றும் நம் உள்ளேயும் கூட உள்ளது.
எனவே, சக இந்தியர்களால் எழுதப்பட்ட இந்த பிரதிபலிப்புகளைப் படிக்கும்போது நான் பிரார்த்திக்கிறேன், நாம் “வெறுமையான கிறிஸ்துமஸாக” உணர மாட்டோம். அதற்கு பதிலாக, கிழக்கிலிருந்து வந்த வயதான ஞானிகளைப் போல நாம் இயேசுவை நாடுவோம்; நம்முடைய இருதயங்களில் அவருடைய சமாதானத்தை அனுபவிப்போம்.
நீங்கள் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட கிறிஸ்துமஸை பெற்றிடுங்கள்!
நம்மில் பெரும்பாலானோருக்கு, டிசம்பர் மாத…
அதே அணியில்
கடுமையான காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கால்பந்து மைதானத்திற்கு திரும்பும்போது, அதே நிலையில் விளையாடும் தன் அணியில் இருக்கும் ஒருவர் இன்முகத்துடன் இருக்கைக்குத் திரும்பினார். இந்த கால்பந்து வீரரும் அதே இடத்திற்காக போட்டியிட்டாலும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க தேர்ந்தெடுத்தனர். ஆனாலும் தங்களுடைய பொறுப்புகளில் நம்பிக்கையாயிருந்தனர். ஒரு நிருபர் அந்த இரு விளையாட்டு வீரர்களும் ‘கிறிஸ்துவில் அவர்களுக்கிருந்த விசுவாசத்தில் வேரூன்றிய தனித்துவம் வாய்ந்த உறவாக” இருப்பதை தாங்கள் ஒருவருக்கொருவர் செய்த ஜெபத்தின் மூலம் கவனித்தார். மற்றவர்கள் கவனித்தப்படி அவர்கள் இருவரும் ஒரே அணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் இயேசுவை விசுவாசிக்கும் பிரதிநிதிகளாக தேவனை மகிமைப்படுத்தினர்.
இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் ‘ஒளியின் பிள்ளைகளாக” வாழ விசுவாசிகளை அப்போஸ்தலனாகிய பவுல் நினைவுபடுத்துகிறார் (1 தெசலோனிக்கேயர் 5:5-6). கிறிஸ்து வழங்கின இரட்சிப்பில் நம்முடைய நம்பிக்கை உறுதியாக இருப்பதால், பொறாமை, பாதுகாப்பின்மை, பயம் அல்லது பகை – இவைகளை செய்யத் தூண்டும் சோதனைகளைத் தவிர்க்கலாம். மாறாக, நாம் ‘ஒருவரையொருவர் ஊக்குவித்து, ஒருவரையொருவர் கட்டி எழுப்ப” முடியும் (வச. 11). மக்களுக்கு சுவிஷேத்தை அறிவிக்கவும், அவர்களை இயேசுவுக்காக வாழ ஊக்குவிப்பதுமான நம்முடைய குறிக்கோளை நாம் பகிர்ந்து செய்யும்போது நாம் தேவனை மகிமைப்படுத்தும் ஆவிக்குரிய தலைவர்களை மதிக்கவும் ‘சமாதமானமாய் வாழவும்” முடியும் (வச. 12-15).
நாம் ஒரே குழுவில் பணியாற்றும்போது, ‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், எல்லவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள், அப்படி செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (வச. 16-18) என்ற பவுலின் கட்டளைக்கு நாம் எப்போதும் கீழ்படியலாம்.
உடைக்கப்பட்டவரின் ஜெபம்
'பரலோகப் பிதாவே, நான் ஒரு ஜெபிக்கிற மனிதன் அல்ல, ஆனால் நீர் இங்கிருந்து என் ஜெபத்தை கேட்பவரானால், திக்கற்றவனாய் இருக்கிறேன். எனக்கு வழி காட்டும்". இட்ஸ் எ வண்டர்ஃபுல் லைஃப் என்ற தரமான திரைப்படத்தின் உடைந்துபோன பாத்திரமான, ஜார்ஜ் பெய்லி என்ற பெயரில் நடிக்கும் கதாபாத்திரத்தின் ஜெபம். இப்போது புகழ் பெற்ற அந்தக் காட்சியில், பெய்லியின் கண்கள் கண்ணீரால் நிரம்பினது. அந்த ஜெபம் ஸ்க்ரிப்டின் ஓரு பகுதியல்ல, ஆனால் அவர் அந்த ஜெபத்தை சொல்லும்போது, 'எங்கு செல்வது என்று வழி தெரியாத மக்களின் தனிமையையும், நம்பிக்கையற்ற தன்மையையும் நான் உணர்ந்தேன்" என்று கூறினார். அது அவரின் இருதயத்தை உடைத்ததாக ஸ்டீவார்ட் கூறினார்.
பெய்லியின் ஜெபம் 'எனக்கு உதவும்" என்பதே. சங்கீதம் 109ல் அதே தான் சொல்லப்பட்டுள்ளது. தாவீது அடுத்து செய்வதறியாத, சிறுமையும் எளிமையுமானவனும், இருதயம் குத்தப்பட்டவனாயும் (வச. 22), மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போனவனுமாய் இருந்தான் (வச. 24). அவன் சாயும் நிழலைப்போல அகன்று போனான் (வச. 23). தன் பகைவர்களுக்கு முன்பாக நிந்தையுள்ளவனாய் உணர்ந்தான் (வச. 25). இப்படிப்பட்ட தீவிர உடைந்த நிலையில் அவருக்கு வேறு எவரும் இல்லை. ஆண்டவரிடம் தனக்கு வழி காட்டும்படி, 'என் தேவனாகிய கர்த்தாவே எனக்கு சகாயம் பண்ணும்" (வச. 26) என்று கூக்குரலிட்டார்.
நம் வாழ்வில் உடைந்துப் போகும் தருணங்கள் இதை பற்றி கூறுகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் ஜெபிப்பது கடினமானதாகி விடுகிறது. நம் அன்பான தேவன் நாம் உதவிக்காக ஏறெடுக்கும் சாதாரண ஜெபத்திற்கும் பதில் கொடுப்பார்.
பெட்டி ஆன்டியின் வழி
நான் சிறுவனாயிருக்கும்போது என்னுடைய அத்தை எங்களை பார்க்க வரும்போதெல்லாம் அது கிறிஸ்மஸ் போல இருந்தது. வரும்போது எனக்கு ஸ்டார் வார் (star war) பொம்மைகள் கொண்டு வருவார்கள். போகும்போது பணம் கொடுத்துவிட்டு செல்வார்கள். அவர்களுடன் நான் தங்கும்போதெல்லாம் காய்கறிகள் சமைக்கமாட்டார்கள் பதிலாக குளிர் சாதனப்பெட்டியில் ஐஸ் கிரிம்களை நிரப்பி வைப்பார்கள். அவருக்கு சில விதிகள் இருந்தன. என்னை தாமதமாக படுக்கைக்கு செல்ல அனுமதித்தார்கள். என் அத்தை தேவனின் பெருந்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு அற்புதமானவர். ஆனாலும் நான் ஆரோக்கியமாக வளர்வதற்கு, என் அத்தை என்னை கவனிப்பதைப் பார்க்கிலும் அதிக கவனம் தேவைப்பட்டது. என்னுடைய பெற்றோர்கள் என் மீதும் என் நடத்தை மீதும் எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டுமென்றும் என்னை அவர்களோடு வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாயிருந்தது.
அத்தை பெட்டியைப் பார்க்கிலும் தேவன் என்னிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார். நாம் அவருக்கு எதிர்த்து நின்றாலும் அல்லது அவரை விட்டு ஓடினாலும் - அவர் நம்மேல் அசைக்கமுடியாத அன்பு வைத்திருந்தாலும், அவர் நம்மிடமிருந்து ஏதாவது எதிர்பார்க்கிறார். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு எப்படி வாழவேண்டும் என அறிவுறுத்தும்போது பத்து பரிந்துரைகளை அல்ல பத்து கட்டளைகளை வழங்கினார் (யாத்திராகமம் 20:1-17). நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ளுவோம் என்று அறிந்து நாம் தேவனிடத்தில் அன்பு கூறவும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் (1 யோவான் 5:3). அதிர்ஷ்டவசமாக தேவனின் கற்பனைகள் பாரமானவைகள் அல்ல (வச. 3). பரிசுத்த ஆவியின் வல்லமையால் தேவனுடைய அன்பையும், மகிழ்ச்சியையும் அனுபவிப்பதால், நாம் அவருடைய கற்பனைகளின்படி வாழ முடியும். நம்மேல் அவர் வைத்துள்ள அன்பு இடைவிடாதது. ஆனால் அதற்கு பதிலாக நாம் தேவனை நேசிக்கின்றோமா என்பதை அறிந்துக்கொள்ள வேதாகமம் சில கேள்விகளை வைத்துள்ளது. ஆவியானவர் வழிநடத்தும் விதமாக நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிகிறோமா? நாம் தேவனிடத்தில் அன்பு கூறுகிறோமென்று சொல்லலாம், ஆனால் அவருடைய பலத்தினால் நாம் என்ன செய்கிறோமென்பது தான் உண்மையானதை வெளிப்படுத்துகிறது.