“மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று
எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிராமாணத்தின்சா பத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” கலாத்தியர் 3:13

ஆடம்பரமான, இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஊசியிலை மரங்கள் அனைத்தையும் வியாபிப்பதற்க்கு முன்பு வரை, வீட்டில் கிறிஸ்துமஸ் ஏற்பாடுகளில் எப்போதும் ஒரு பெரிய கிறிஸ்துமஸ் சவுக்கு மரம் அடங்கும். நான் வளர்ந்து வருகிற போது, கிறிஸ்துமஸ் வாரத்திற்காக ஆவலுடன் காத்திருப்பேன், அப்பொழுது தான் நாம் ‘உடனடி’ நடைபாதை கடைகளுக்கு செல்ல முடியும், தெரு தெரு முனைக் கடைகளில் அவை விற்கப்பட்டன. போராட்டத்திற்கு பிறகு ஒரு நல்ல பேரம் பேசி, பின்னர் நாங்கள் கண்ட மிகப்பெரிய, அடர்த்தியான மரத்துடன் வீட்டிற்குச் செல்வோம். மரத்தை பெற நாங்கள் கிறிஸ்துமஸுக்கு ஒரு சில நாட்கள் முன் வரை காத்திருக்க வேண்டியிருந்தது; இது ஏன் என்றால் தெற்கின் ஈரப்பதமான வானிலை ஓரிரு நாட்களில் மரத்தை வாட்டி உலர்த்திவிடும்.

நாங்கள் கிறிஸ்துமஸ் மரத்தை ஆட்டோ ரிக்‌ஷாவிலிருந்து இறக்கியப்போது, எங்கள் அண்டை வீட்டாரும் அவர்களுடைய குழந்தைகளும் சூழ்ந்து கொண்டு பார்த்தபடி, சிரிக்கவும், அதைப் பார்த்து பிரமிக்கவும் விரைவர், எங்கள் சிறிய விளையாட்டுத் தோழர்கள் மரத்தை அலங்கரிக்க உதவ வீட்டிற்கு வருவார்கள். பலூன்கள் ஊதுதல் மற்றும் பருத்தி பஞ்சுகளை ஒட்டி, அட்டை மற்றும் காகித ஆபரணங்களை நாங்கள் கிளைகளில் தொங்கவிட்டு, உடனே ஒரு அடி பின் போய் நாங்கள் உருவாக்கினதை பார்த்து இரசித்தோம். இந்த ஆர்வமுள்ள தோற்றமுடைய ஊசியிலை மரம் நாங்கள் பார்த்ததிலேயே மிகவும் ‘அழகானது’ மற்றும் நாங்கள் கிறிஸ்துமஸ்-ன் கனநேர வாசனையை நேசித்தோம்.

கிறிஸ்துமஸ் மர பாரம்பரியத்தின் தோற்றம் விவாதத்திற்குரியதாக இருந்தபோதிலும், கல்வாரி மரம் என்ற அந்த ஒரு ’மரத்திற்கு’ மட்டுமே மறுக்க முடியாத நோக்கமும் அழகும் உள்ளது. அதன் அழகு அதில் தொங்கவிடப்பட்ட ஆபரணங்களால் அல்ல, ஆனால் அதில் தொங்கினவரே – காரணம் தேவனுடைய குமாரனாகிய இயேசு. கிறிஸ்து மனித இனத்தின் மொத்த சாபத்தையும் அவர் மேல் ஏற்றுக்கொண்டார். நம்முடைய பாவங்கள், தோல்விகள் அவருடன் கல்வாரி மரத்தில் அறையப்பட்டன, அவர் சாபமானதால், இப்போது நாம் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறோம். அவர் நமக்காகப் பிறந்தார், அவர் நமக்காக மரித்தார், அவர் நமக்காக திரும்பி வருவார். அவர் நம்மிடம் விரும்புவது எல்லாம் நாம் அவருக்காக வாழ்வதே.

அன்புள்ள பிதாவே, மின்னும் விளக்குகள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்களின் உற்சாகத்தைத் தாண்டிப் பார்க்க எனக்கு உதவுங்கள். கல்வாரியின் அழகைப் பார்க்க எனக்கு உதவுங்கள்.. ஆமென் . 

– ரெபெக்கா விஜயன்