யாரோ ஒரு புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை கொடுத்தப் பிறகு டென்னிஸின் வாழ்க்கை மாற்றப்பட்டது. அதை வாசித்தல் அவரை கவர்ந்தது. அது அவருடைய நிலையான துணையாக மாறியது. ஆறு மாதங்களுக்குள், அவரது வாழ்க்கையில் இரண்டு வாழ்வை மாற்றும் நிகழ்வுகள் நிகழ்ந்தன. அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட அவர் இயேசுவின்மேல் நம்பிக்கை வைத்தார் மற்றும் கடுமையான தலைவலியினிமித்தம் அவருக்கு மூளையில் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. தாங்கமுடியாத வலியின் காரணமாக அவர் படுக்கையிலேயே இருந்து வேலை செய்ய முடியாமல் கிடந்தார். தூக்கமில்லாத ஒரு இரவில் அவர் தேவனை நோக்கி கூப்பிட்டார். இறுதியாக காலை 4.30 மணிக்கு தூக்கம் வந்தது.
உடல் ரீதியான வலிகள் நம்மை தேவனிடம் கூக்குரலிடச் செய்யலாம், ஆனால் மற்ற துன்பகரமான வாழ்க்கை சூழ்நிலைகளும் அவரிடம் ஓட நம்மைத் தூண்டுகின்றன. டென்னிஸின் போராட்ட இரவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம்பிக்கை இழந்த யாக்கோபு தேவனை எதிர்கொண்டார் (ஆதி. 32:24). யுhக்கோபுக்கு அது ஒரு தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்ப பிரச்சனை. தன் சகோதரன் ஏசாவுக்கு எதிராக அநீதி இழைத்தார். (ஆதி. 27) ஏசா உடனடியாக பழிவாங்கக்கூடும் என்று பயந்தார். இந்தக் கடினமான சூழ்நிலையில் தேவனுடைய உதவியை நாடின யாக்கோபு தேவனை நேருக்கு நேர் சந்தித்த (32:30) பிறகு ஒரு மாற்றப்பட்ட மனிதனாக வெளிப்பட்டார்.
டென்னிஸ{ம் அவ்வாறே செய்தார். ஜெபத்தில் தேவனோடு மன்றாடின பிறகு, படுத்த படுக்கையில் கிடந்த டென்னிஸ் எழுந்து நிற்க முடிந்தது மற்றும் மருத்துவரின் பரிசோதனையில் கட்டியின் அறிகுறிகள் காணப்படவில்லை.
தேவன் எப்போதும் நம்மை அற்புதமாக குணப்படுத்த தெரிந்தெடுப்பதில்லை என்றாலும், அவர் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு நம்முடைய சூழ்நிலைக்கு தக்கதாக நம்முடைய தேவைகளை சந்திப்பார் என்று நம்புகிறோம். நம்முடைய விரக்தியில் நாம் உண்மையான ஜெபங்களை ஏறெடுக்கிறோம். அதன் முடிவுகளை அவரிடம் விட்டுவிடுகிறோம்.
ஜெபத்தில் தேவனுக்கு முன்பாகக் கொண்டுவர நீங்கள் எந்தக் காரியத்தைக் குறித்துப் போராடுகிறீர்கள்? சூழ்நிலையை அவர் மாற்றாத போதும் நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிப்பதின் சில நன்மைகள் என்ன?
தேவனே, வாழ்க்கையின் சிரமங்களும் சவால்களும், ஜெபத்தில் உம்மைத் தேடவும், உம்மைப் பற்றி அறிகிற அறிவிலே வளர உதவும் வாய்ப்புகளாகக் காண உதவி செய்யும்.
