கடுமையான காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கால்பந்து மைதானத்திற்கு திரும்பும்போது, அதே நிலையில் விளையாடும் தன் அணியில் இருக்கும் ஒருவர் இன்முகத்துடன் இருக்கைக்குத் திரும்பினார். இந்த கால்பந்து வீரரும் அதே இடத்திற்காக போட்டியிட்டாலும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க தேர்ந்தெடுத்தனர். ஆனாலும் தங்களுடைய பொறுப்புகளில் நம்பிக்கையாயிருந்தனர். ஒரு நிருபர் அந்த இரு விளையாட்டு வீரர்களும் ‘கிறிஸ்துவில் அவர்களுக்கிருந்த விசுவாசத்தில் வேரூன்றிய தனித்துவம் வாய்ந்த உறவாக” இருப்பதை தாங்கள் ஒருவருக்கொருவர் செய்த ஜெபத்தின் மூலம் கவனித்தார். மற்றவர்கள் கவனித்தப்படி அவர்கள் இருவரும் ஒரே அணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் இயேசுவை விசுவாசிக்கும் பிரதிநிதிகளாக தேவனை மகிமைப்படுத்தினர்.
இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் ‘ஒளியின் பிள்ளைகளாக” வாழ விசுவாசிகளை அப்போஸ்தலனாகிய பவுல் நினைவுபடுத்துகிறார் (1 தெசலோனிக்கேயர் 5:5-6). கிறிஸ்து வழங்கின இரட்சிப்பில் நம்முடைய நம்பிக்கை உறுதியாக இருப்பதால், பொறாமை, பாதுகாப்பின்மை, பயம் அல்லது பகை – இவைகளை செய்யத் தூண்டும் சோதனைகளைத் தவிர்க்கலாம். மாறாக, நாம் ‘ஒருவரையொருவர் ஊக்குவித்து, ஒருவரையொருவர் கட்டி எழுப்ப” முடியும் (வச. 11). மக்களுக்கு சுவிஷேத்தை அறிவிக்கவும், அவர்களை இயேசுவுக்காக வாழ ஊக்குவிப்பதுமான நம்முடைய குறிக்கோளை நாம் பகிர்ந்து செய்யும்போது நாம் தேவனை மகிமைப்படுத்தும் ஆவிக்குரிய தலைவர்களை மதிக்கவும் ‘சமாதமானமாய் வாழவும்” முடியும் (வச. 12-15).
நாம் ஒரே குழுவில் பணியாற்றும்போது, ‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், எல்லவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள், அப்படி செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (வச. 16-18) என்ற பவுலின் கட்டளைக்கு நாம் எப்போதும் கீழ்படியலாம்.
ஒரே குழுவில் இருந்து பணியாற்றும்போது உங்களை ஊக்குவித்தவர் யார்? உங்களுடன் பணியாற்றும் ஒருவரை நீங்கள் எவ்வாறு ஊக்குவிக்க முடியும்?
இயேசுவே, என்னுடன் பணியாற்றும் ஒருவரை ஊக்குவிக்க, தயவுசெய்து இன்று எனக்கு வாய்ப்புகளைத் தாரும்.