‘பரலோகப் பிதாவே, நான் ஒரு ஜெபிக்கிற மனிதன் அல்ல, ஆனால் நீர் இங்கிருந்து என் ஜெபத்தை கேட்பவரானால், திக்கற்றவனாய் இருக்கிறேன். எனக்கு வழி காட்டும்”. இட்ஸ் எ வண்டர்ஃபுல் லைஃப் என்ற தரமான திரைப்படத்தின் உடைந்துபோன பாத்திரமான, ஜார்ஜ் பெய்லி என்ற பெயரில் நடிக்கும் கதாபாத்திரத்தின் ஜெபம். இப்போது புகழ் பெற்ற அந்தக் காட்சியில், பெய்லியின் கண்கள் கண்ணீரால் நிரம்பினது. அந்த ஜெபம் ஸ்க்ரிப்டின் ஓரு பகுதியல்ல, ஆனால் அவர் அந்த ஜெபத்தை சொல்லும்போது, ‘எங்கு செல்வது என்று வழி தெரியாத மக்களின் தனிமையையும், நம்பிக்கையற்ற தன்மையையும் நான் உணர்ந்தேன்” என்று கூறினார். அது அவரின் இருதயத்தை உடைத்ததாக ஸ்டீவார்ட் கூறினார்.
பெய்லியின் ஜெபம் ‘எனக்கு உதவும்” என்பதே. சங்கீதம் 109ல் அதே தான் சொல்லப்பட்டுள்ளது. தாவீது அடுத்து செய்வதறியாத, சிறுமையும் எளிமையுமானவனும், இருதயம் குத்தப்பட்டவனாயும் (வச. 22), மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போனவனுமாய் இருந்தான் (வச. 24). அவன் சாயும் நிழலைப்போல அகன்று போனான் (வச. 23). தன் பகைவர்களுக்கு முன்பாக நிந்தையுள்ளவனாய் உணர்ந்தான் (வச. 25). இப்படிப்பட்ட தீவிர உடைந்த நிலையில் அவருக்கு வேறு எவரும் இல்லை. ஆண்டவரிடம் தனக்கு வழி காட்டும்படி, ‘என் தேவனாகிய கர்த்தாவே எனக்கு சகாயம் பண்ணும்” (வச. 26) என்று கூக்குரலிட்டார்.
நம் வாழ்வில் உடைந்துப் போகும் தருணங்கள் இதை பற்றி கூறுகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் ஜெபிப்பது கடினமானதாகி விடுகிறது. நம் அன்பான தேவன் நாம் உதவிக்காக ஏறெடுக்கும் சாதாரண ஜெபத்திற்கும் பதில் கொடுப்பார்.
உன் வாழ்க்கையில் நீ கடைசியாக எப்போது உடைக்கப்பட்டாய்? உன்னுடைய குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தால் எப்படி உதவி செய்வாய்?
தேவனே, சில நாட்கள் கடினமாயிருக்கிறது. நம்பிக்கையற்று இருக்கிறார்கள். என்னுடைய உடைக்கப்பட்ட நேரத்தில் உமக்கு நேராக என் இருதயத்தை திருப்பும். உம்மிடத்தில் உதவி கேட்க பெலன் தாரும்.