நான் சிறுவனாயிருக்கும்போது என்னுடைய அத்தை எங்களை பார்க்க வரும்போதெல்லாம் அது கிறிஸ்மஸ் போல இருந்தது. வரும்போது எனக்கு ஸ்டார் வார் (star war) பொம்மைகள் கொண்டு வருவார்கள். போகும்போது பணம் கொடுத்துவிட்டு செல்வார்கள். அவர்களுடன் நான் தங்கும்போதெல்லாம் காய்கறிகள் சமைக்கமாட்டார்கள் பதிலாக குளிர் சாதனப்பெட்டியில் ஐஸ் கிரிம்களை நிரப்பி வைப்பார்கள். அவருக்கு சில விதிகள் இருந்தன. என்னை தாமதமாக படுக்கைக்கு செல்ல அனுமதித்தார்கள். என் அத்தை தேவனின் பெருந்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு அற்புதமானவர். ஆனாலும் நான் ஆரோக்கியமாக வளர்வதற்கு, என் அத்தை என்னை கவனிப்பதைப் பார்க்கிலும் அதிக கவனம் தேவைப்பட்டது. என்னுடைய பெற்றோர்கள் என் மீதும் என் நடத்தை மீதும் எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டுமென்றும் என்னை அவர்களோடு வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாயிருந்தது.
அத்தை பெட்டியைப் பார்க்கிலும் தேவன் என்னிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார். நாம் அவருக்கு எதிர்த்து நின்றாலும் அல்லது அவரை விட்டு ஓடினாலும் – அவர் நம்மேல் அசைக்கமுடியாத அன்பு வைத்திருந்தாலும், அவர் நம்மிடமிருந்து ஏதாவது எதிர்பார்க்கிறார். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு எப்படி வாழவேண்டும் என அறிவுறுத்தும்போது பத்து பரிந்துரைகளை அல்ல பத்து கட்டளைகளை வழங்கினார் (யாத்திராகமம் 20:1-17). நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ளுவோம் என்று அறிந்து நாம் தேவனிடத்தில் அன்பு கூறவும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் (1 யோவான் 5:3). அதிர்ஷ்டவசமாக தேவனின் கற்பனைகள் பாரமானவைகள் அல்ல (வச. 3). பரிசுத்த ஆவியின் வல்லமையால் தேவனுடைய அன்பையும், மகிழ்ச்சியையும் அனுபவிப்பதால், நாம் அவருடைய கற்பனைகளின்படி வாழ முடியும். நம்மேல் அவர் வைத்துள்ள அன்பு இடைவிடாதது. ஆனால் அதற்கு பதிலாக நாம் தேவனை நேசிக்கின்றோமா என்பதை அறிந்துக்கொள்ள வேதாகமம் சில கேள்விகளை வைத்துள்ளது. ஆவியானவர் வழிநடத்தும் விதமாக நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிகிறோமா? நாம் தேவனிடத்தில் அன்பு கூறுகிறோமென்று சொல்லலாம், ஆனால் அவருடைய பலத்தினால் நாம் என்ன செய்கிறோமென்பது தான் உண்மையானதை வெளிப்படுத்துகிறது.
தேவனுக்கு கீழ்படிவது எப்போது உங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது? கீழ்படிதலுக்கும் அன்பு கூறுவதற்கும் இடையேயான தொடர்பு நீங்கள் கிறிஸ்துவில் வாழ எப்படி புதிய நுண்ணறிவை வழங்குகிறது?
தேவனே, நான் உம்மை நேசிக்கிறேனென்று சொல்லுகிறேன் ஆனால் அது கடினமானதாக இருக்கிறது. கீழ்படிவது கடினமாயிருக்கிறது. உம்முடைய சத்தியங்களை காணவும் உம்மை கிரியையினால் நேசிக்கவும் உதவி செய்யும்.