ஒரு தாயார் தான் கிறிஸ்மஸ் பரிசுகளுக்காக அதிகமான பணம் செலவு செய்வதை உணர்ந்தார்கள். அதனால் ஒரு வருடம் எதாவது வித்தியாசமாக முயற்சி செய்ய நினைத்தார்கள். கிறிஸ்மஸ் விடுமுறைக்கு சில மாதங்களுக்கு முன்பு, முற்றத்தில் விற்பனையாகும் மலிவான மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களை எடுத்துக்
கொண்டார்கள், அவர்கள் வழக்கத்தைவிட அதிகமான பொருட்களை வாங்கினார்கள் ஆனால் குறைந்த விலையில். கிறிஸ்மஸ்க்கு முந்தய நாளில், அவருடைய பிள்ளைகள் தங்கள் தங்கள் பரிசுகளை ஒன்றின்பின ஒன்றாக பிரித்தனர். அடுத்த நாள் இன்னும் அனேக பரிசுகள் காத்திருந்தன. புதிய பரிசுகளை வாங்காதது அந்த தாயாருக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியதால், கிறிஸ்மஸ் அன்றைக்கும் காலையில் கூடுதலாக பரிசுகளை வாங்கி வைத்தார் அம்மா. பிள்ளைகள் பரிசுகளை பிரித்து கொண்டு விரைவாக ‘இனி பரிசுகளை திறக்க நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். எங்களுக்கு மிக அதிகமாக கொடுத்தீர்கள்” என்று குறை கூறினார்கள். இது பிள்ளைகளிடமிருந்து கிறிஸ்மஸ் அன்றைக்கு பொதுவாக வரும் பதில் இல்லை.
தேவன் நம்மை எவ்வளவு அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார், ஆனால் நாம் இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறோம். ஒரு பெரிய வீடு, ஒரு நல்ல கார், மிக பெரிய வங்கி கணக்கு, அல்லது வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளுங்கள்ஸ. பவுல், தீமோத்தேயு தன் சபை மக்களுக்கு ‘இந்த உலகத்திற்கு நாம் ஒன்றும் கொண்டுவந்ததில்லை, இதிலிருந்து ஒன்றும் கொண்டுபோவதுமில்லை. உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்று இருக்கக்கடவோம்” என்று நினைப்பூட்ட உற்சாகப்படுத்தினார் (1 தீமோ. 6:7-8).
தேவன், நம்முடைய தேவைகளை கொடுப்பது மட்டுமில்லாமல், நமக்கு சுவாசத்தையும் ஜீவனையும் கொடுத்திருக்கிறார். அவர் கொடுக்கும் ஆசீர்வாதங்களை புத்துணர்ச்சியோடு அனுபவித்து ‘நீர் எங்களுக்கு எவ்வளவு அதிகமாய் கொடுத்திருக்கிறீர். இன்னும் எங்களுக்கு தேவையில்லை” என்று சொல்லி திருப்தியாயிருக்க வேண்டும். போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (வச. 6).
இன்றைக்கு நீ எதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துவாய்?
திருப்தியாயிருக்க எப்படி கற்றுக்கொள்ளுவாய்?
தேவனே, நீர் எங்களை எவ்வளவாய் ஆசீர்வதித்திருக்கிறீர். ஓவ்வொரு நாளும் நன்றி செலுத்த கற்றுத்தாரும்.