ரஷ்ய நாட்டு திருமணங்கள் மிகவும் அழகுள்ளதாய் தனித்துவம் வாய்ந்ததாய் நடைபெறும். அதிலும் குறிப்பிட்ட ஒரு வழக்கமுறை என்னவென்றால் – நலம் பாராட்டுபவர் எழுந்திருந்து தம்பதியினரின் நலன்களை கூறி முடித்த பின்பு அனைவரும் தங்கள் கையில் இருக்கும் பானத்தை குடித்து “கசப்பு!! கசப்பு !!” என்று கூறுவார்கள். புது தம்பதியினர் எழுந்து ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அந்த பானத்தை மறுபடியும் இனிமையாக்குவார்கள்.
ஏசாயா 24ல் தீர்க்கதரிசனம் உரைத்தது போல் கசப்பு நிறைந்த இப்பூமியில் மேல் விழுந்த சாபமும், அழிவும் இனி நமக்கு வரவிருக்கும் இனிமையுள்ள நம்பிக்கையான புதிய வானமும் புதிய பூமிக்கும் வழி திறக்கிறது (அதி 25). தேவன் நமக்கு அருமையான விருந்தையும், இனிமையான பானத்தையும் ஆயத்தம் பண்ணி கொண்டிருக்கிறார். அவருடைய இராஜ்ஜியத்தில் இடைவிடாத ஆசிர்வாதங்களும், கனி நிறைந்த வாழ்க்கையும் குறைவில்லாமல் எல்லோர்க்கும் வழங்கப்படும். சேனைகளின் கர்த்தரின் அரசாட்சியில் மரணம் ஜெயிக்கப்படும், கண்ணீர் துடைக்கப்படும், நிந்தைகள் நீக்கப்படும் (வ. 7-8). அவர் பிள்ளைகளோ “இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்” என்று களிகூறுவார்கள் (வச. 9).
ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் தேவனோடு நாம் ஒரு நாள் வாசம்பண்ணுவோம். சபையாகிய மணவாட்டியை அவர் சேர்த்துக் கொள்ளும்போது ஏசாயா 25 நிறைவேறுகிறது. கசப்பு நிறைந்த நம் வாழ்வும் மதுரமாகும்.
உங்கள் வாழ்வின் எந்த கசப்பு நிறைந்த பகுதியை தேவன் இனிமையாக மாற்ற வேண்டும்? தேவனுடைய வருகைக்கு நாம் காத்திருக்கும் போது, மற்றவர்களின் கசப்பான அனுபவங்களை மாற்ற நீங்கள் எந்த காரியங்களை செய்ய முடியும்?
தேவனே கசப்பும், வேதனையும் நான் சந்திக்கும்போது மறுபடியும் என் வாழ்வை இனிமையாக மாற்றுவீர் என்று நம்ப கடினமாக இருக்கிறது. அழுகையை களிப்பாக மாற்றும். சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தையும் அழுகைக்கு பதிலாக களிப்பையும் தரும் உம்மேல் என் நம்பிக்கையை வைக்க உதவி செய்யும்.