மரண படுக்கையில் படுத்திருக்கும் எனது தந்தையின் சுவாச காற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. இறுதியில் ஒரு நாள் அது நின்று போவதை நானும் என் சகோதரியும் அம்மாவும் அழுகையுடன் பார்த்தோம். அவருடைய மரணம் எங்கள் வாழ்க்கையை வெறுமையாக்கினது. எங்களோடு கூட எப்போதும் இருந்த அவர் இப்போது அவருடைய நினைவுகளை மட்டுமே வைத்து சென்றுவிட்டார். இருப்பினும் அவரோடு மறுபடியும் ஒன்றிணைக்க படுவோம் என்கிற விசுவாசம் எங்களுக்கு இருக்கிறது.
அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனென்றால் அவர் தேவனை அறிந்தவரும் தேவன் மேல் அன்புவைத்தவராகவும் இருந்தார். என் தந்தையின் முதல் சுவாசத்தை தேவன் அவர் நாசியிலே ஊதினார். அவர் முதல் சுவாசத்திலிருந்து அதை தொடர்ந்து எல்லா சுவாசத்திலும் தேவனுடைய நெருக்கமான ஈடுபாடு அவரோடு இருந்தது. அதைப்போல் தான் அவர் நம் வாழ்விலும் எல்லா சுவாசத்திலும் ஈடுபட்டு வருகிறார். தேவனே நாம் கருவிலிருக்கும் போது பிரமிக்கத்தக்க அதிசயமாய் நம்மை உருவாக்கினார் (வச. 14). அதுமுதல் இருந்து என் தந்தை போல் நம் இறுதி சுவாசம் வரையில் தேவனே நம்மோடு இருந்து நம்மை அன்போடும் அரவணைப்போடும் மறுபடி அவரோடு சேர்த்துக் கொள்வார்.
எல்லா தேவ பிள்ளைகளுக்கும் இது உண்மையாக இருக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள். ஆகையால் சுவாசமுள்ள யாவும் தேவனை துதிப்பதாக என்கிற வசனத்தின்படி, நமக்கு மீதமுள்ள ஒவ்வொரு நாளும் அவரை துதிப்போம்.
தேவன் உங்கள் வாழ்வில் ஆழமாய் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை நினைக்கும்போது அது எப்படி உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது ? உங்கள் சுவாசத்தின் மூலம் எப்படி அவருக்கு நன்றி சொல்லலாம்?
அன்பின் தேவனே, என்னை உருவாக்கி எனக்கு சுவாசிக்க உம் சுவாசத்திற்காகவும் எனக்கு தந்த நம்பிக்கைக்காகவும் உமக்கு நன்றி. வாழ்வின் இழப்புகளிலும் வருத்தத்திலும் உம்மை அண்டி கொள்ளும்படி உதவும்.