சமீபத்தில் நானும் என் நண்பர்களும் ஒரு நாள் சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில் அவரவர் தாங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களையும் பாடுகளையும் குறித்து பகிர்ந்து கொண்டோம். பார்க்கப்போனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சவால்களை எதிர் கொண்டிருந்தார்கள். நானும் இன்னொரு நண்பனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எங்கள் பெற்றோர்களை கவனித்துக் கொண்டிருந்தோம், மற்றவரின் குழந்தை ஒன்று ஆகாரம் கட்டுப்பாடு இல்லாமையினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது, ஒருவர் நீண்ட கால உடல் வலியால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார், கடைசியாக ஒருவருக்கு அறுவை சிகுச்சை ஒன்று நடைபெற இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் எங்கள் சவால்களை சந்தித்து கொண்டு வந்தோம்.
தாவீதின் ஊராகிய எருசலேமிலே தேவனுடைய பெட்டி கொண்டுவரப்பட்டதை 1 நாளாகமம் 16ஆம் அதிகாரம் விவரிக்கிறது. போர்களின் மத்தியில் நடந்த சமாதான உடன்படிக்கை என்று இச்சம்பவம் சாமுவேல் குறிப்பிடுகிறார் (2 சாமு. 7:1). அப்போது தாவீது மக்களை ஒரு பாடலின் மூலம் வழிநடத்தினார் (16 :8-36). ஒன்றிணைந்து தேவனுடைய வல்லமையையும், நிறைவேற்றின வாக்குத்தத்தங்களுக்காகவும், கடந்த நாட்கள் முழுவதும் காத்த அவர் தயவுக்காகவும் நன்றி செலுத்தி பாடினார்கள் (வச. 12-22). “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்”(வ.16) என்று அழுதார்கள். ஏனெனில் வரப்போகும் அநேக யுத்தங்களுக்கு அவர் சமூகம் மிகவும் அவசியமாக இருந்தது.
“கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்.” குடும்ப பிரச்சனைகளோ, வியாதியோ, பாடுகளோ நமக்கு நேரிடும்போது இதுவே நமக்கு சரியான ஆலோசனையாக இருக்கிறது. நம்மை அவர் தனியாக போராட விடவில்லை. எப்போதும் நம்மோடு இருந்து நம்மை தொடர்ந்து பாதுகாப்பார்.
நம் தேவன் நம்மை கடக்க செய்வார்.
தற்போது எந்த சவாலை சந்திக்க தேவனுடைய உதவி உங்களுக்கு தேவை? எப்படி உங்கள் சவால்களை தேவனிடம் ஒப்படைக்க முடியும்?
அற்புத தேவனே, என் சவால்களை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். உம் வல்லமையையும் உம் வாக்குத்தத்தங்களையும் மாத்திரம் நம்புகிறேன்.