ஜான் ஹார்ப்பரும் தனது ஆறு வயது மகளும் டைட்டானிக் கப்பலில் அடி எடுத்து வைக்கும் போது என்ன நிகழப்போகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஹார்ப்பர் இயேசுவில் அன்புகூருவதிலும், மற்றவர்களுக்கு அவர் அன்பை அறிவிப்பதிலும் ஆர்வமாயிருந்தார். கப்பல் பனிப்பாறையை மோதியவுடன் தனது மகளை ஒரு உயிர்காப்பு படகின் மீது ஏற்றி விட்டு தம்மால் முடிந்தவறை மற்றவர்களை காப்பாற்ற சென்றார். மிதவைச்சட்டையை (லைப் ஜாக்கெட்) மற்றவர்களுக்கு கொடுக்கும் போது “பெண்களையும், குழந்தைகளையும், இரட்சிக்க படாதவர்களையும் படகில் ஏற்றுங்கள் ” என்று கூச்சலிட்டுக் கொண்டே சென்றார். ஹார்ப்பர் தம் கடைசி மூச்சு வரை இயேசுவை பற்றி பகிர்ந்து தம் மூச்சை விட்டார்.
இதே போல் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் ஒருவர் நாம் நித்தியமாய் வாழும்படி தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். இது அவர் ஒரு நாளில் எடுத்த முடிவல்ல. அவர் நம் பாவங்களுக்கு பரிகாரமாக மரிப்பது அவரது லட்சியமாக இருந்தது. யூத தலைவர்களிடம் அவர் பேசும்போது “ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்” (வச. 10:11,15,17,18) என்று பலமுறை கூறினார். இவைகளை அவர் சொன்னது மாத்திரம் அல்லாமல் அதன்படி வாழ்ந்து சிலுவையில் கொடூரமான மரணத்தை ஏற்றுக் கொண்டார். பரிசேயருக்கும், ஜான் ஹர்பெர்க்கும், நமக்கும் “ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (வ.10) என்றார்.
என்னை சுற்றியுள்ளவர்களை நான் நேசிக்கிறேன் என்று நான் எப்படி வெளிப்படுத்த முடியும்? இயேசுவின் அன்பை என் நடவடிக்கையின் மூலம் எப்படி காட்டுவது?
இயேசுவே, நீர் உம் அன்பை வெளிப்படுத்தின விதத்தை வர்ணிப்பதற்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. எப்படியேனும் உம் அன்பை மற்றவர்களுக்கு காண்பிக்க எனக்கு உதவும்.